இந்த வலைபூவை வாசிக்கும் அனைவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்.
இன்று குற்றாலத்தில் நடந்த சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்திய விழாவில் என் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது. ஆய்வின் தலைப்பு இதுதான்.
"உருகுணை பாண்டியர்கள்"
இந்த கட்டுரையை கீழே தந்திருக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை படிக்கும் முன்பு முக்கியம் சில செய்திகளை படிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இதழில் வெளியைடப்படும் கட்டுரைகள் அனைத்தும் 5 ஏ4 பக்கங்களுக்கு மிகாமல் சில அளவு எழுத்துரு விதிகளைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்த படியால் என்னால் முழுவிவரங்களையும் தொகுக்க இயல்வில்லை. முழு விவரங்களும் இதே வலைபூவில் அடுத்த பதிவில் போடுகிறேன்.
ஆனால் நான் இந்த கட்டுரை மூலம் விவாதிக்க விரும்பும் 5 விடயங்கள் மிக முக்கியமானவை. அதை எதிர்பார்த்து தான் இக்கட்டுரையை பொதுவெளியில் பகிர்கிறேன்.
இனி கட்டுரைக்கு போகலாம்.
அறிமுகம்:
உருகுணை மன்னர்கள் பாண்டியர்களே:
உருகுணையை மகாநாகன் காலத்துக்கு முன் ஆண்ட மன்னர்கள் பாண்டியர்களே என்பதற்கு அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளில் உள்ள குலக் குறீயீடான மீன் பொறிப்பும், அவர்கள் வெளியிட்ட காசுக்கும் தமிழக பாண்டியர்களின் காசுகளுக்கும் உள்ள ஒற்றுமையும், கல்வெட்டுகளிலும் காசிலும் அவர்களின் பெயரான மஜிமஹராஜா என்று வரும் மீனை நினைவுப்படுத்தும் பெயரும், அவற்றில் காணப்படும் குலக்குறியீடான மீன் சின்னமுமே சான்றுகளாம். இவர்களைப் பற்றி வெளியிட்ட வரலாற்று நூலாசிரியர்கள் இவர்கள் தமிழகத்தவர்5 என்றும் பாண்டியர்கள்6 என்றும் கூறியுள்ளனர்.
அடைக்கலம் புகுந்த சிங்களவர் வரலாறு:
காலக்கணிப்பு:
தொகுத்து எழுதப்பட்ட கட்டுரை. (இணைப்பு: http://ta.wikipedia.org/wiki/அகரமேறிய_மெய்_முறைமை)
இன்று குற்றாலத்தில் நடந்த சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்திய விழாவில் என் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது. ஆய்வின் தலைப்பு இதுதான்.
"உருகுணை பாண்டியர்கள்"
இந்த கட்டுரையை கீழே தந்திருக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை படிக்கும் முன்பு முக்கியம் சில செய்திகளை படிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இதழில் வெளியைடப்படும் கட்டுரைகள் அனைத்தும் 5 ஏ4 பக்கங்களுக்கு மிகாமல் சில அளவு எழுத்துரு விதிகளைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்த படியால் என்னால் முழுவிவரங்களையும் தொகுக்க இயல்வில்லை. முழு விவரங்களும் இதே வலைபூவில் அடுத்த பதிவில் போடுகிறேன்.
ஆனால் நான் இந்த கட்டுரை மூலம் விவாதிக்க விரும்பும் 5 விடயங்கள் மிக முக்கியமானவை. அதை எதிர்பார்த்து தான் இக்கட்டுரையை பொதுவெளியில் பகிர்கிறேன்.
இனி கட்டுரைக்கு போகலாம்.
உருகுணை பாண்டியர்கள்
அறிமுகம்:
உருகுணையை தேவநாம்பிய திச்சனின் (கி.மு.307 - கி.மு.267) தம்பியான மகாநாகனுக்கு முன்னர் ஆண்ட மன்னர்களை பற்றி இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சமும் தீபவம்சமும் சான்றுகளை தரவில்லை. ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட தாதுவம்சம்1 என்னும் நூல் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. மகாவம்சம் இவர்களை பற்றி நேரடியான தகவல்களை தராவிட்டாலும் தேவநாம்பியன் எடுத்த விழாவுக்கு உருகுணையின் தலைநகரான கதிர்காமத்தின் மன்னர்கள் வந்தார்கள் என்ற குறிப்பை மட்டும் தருகிறது.2 இந்த உருகுணை மன்னர்கள் வெளியிட்ட 16 கல்வெட்டுகளும்3 ஒரு காசும்4 பௌத்த இலக்கியங்களும் இவர்களின் வரலாற்றை அறிவதற்கு உதவியாய் உள்ளன.
உருகுணை மன்னர்கள் பாண்டியர்களே:
உருகுணையை மகாநாகன் காலத்துக்கு முன் ஆண்ட மன்னர்கள் பாண்டியர்களே என்பதற்கு அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளில் உள்ள குலக் குறீயீடான மீன் பொறிப்பும், அவர்கள் வெளியிட்ட காசுக்கும் தமிழக பாண்டியர்களின் காசுகளுக்கும் உள்ள ஒற்றுமையும், கல்வெட்டுகளிலும் காசிலும் அவர்களின் பெயரான மஜிமஹராஜா என்று வரும் மீனை நினைவுப்படுத்தும் பெயரும், அவற்றில் காணப்படும் குலக்குறியீடான மீன் சின்னமுமே சான்றுகளாம். இவர்களைப் பற்றி வெளியிட்ட வரலாற்று நூலாசிரியர்கள் இவர்கள் தமிழகத்தவர்5 என்றும் பாண்டியர்கள்6 என்றும் கூறியுள்ளனர்.
அடைக்கலம் புகுந்த சிங்களவர் வரலாறு:
வட இலங்கையை ஆண்ட தேவநாம்பிய திச்சனுக்கு பல தம்பிகள் இருந்தார்கள். தேவநாம்பியனின் மனைவி தன் மகனை அடுத்த அரசனாக்க வேண்டும் என்பதற்காக மகாநாகனை கொல்ல முயன்றாள். இதை அறிந்த மகாநாகன் உருகுணை அரசர்களிடம் அடைக்கலம் ஆனான். அவனுக்கு அட்டாலயதிச்சன், கோதாபயன் என இரு மகன்கள் இருந்தனர். கோதாபயன் தன் மகனான காகவண்ண தீச்சனை உருகுணைக்கு அரசனாக்க ஆசைப்பட்டு உருகுணையின் மன்னர்கள் குலத்தை அழித்தான். அந்த பாவத்தை போக்குவதற்கு பௌத்த விகாரைகளை கட்டினான் என்கிறது தாதுவம்சம் என்னும் நூல்.2
கல்வெட்டுகள் காட்டும் பாண்டியர் வரலாறு3:
தென்னிலங்கையின் கெனனக்கலையில் உள்ள பிராகிருதக் கல்வெட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டதுடன் காமனி திச்சனின் தந்தையான மச்சமகாராஜன் கிரிதிட்டை, கரசகினிதிட்டை, வெளிகாமை, காசியப்பநகரம், மலுகாமம் மற்றும் நொக்கபிகம் போன்ற ஊர்களை சங்கத்துக்கு தானமளித்தான் எனக் கூறுகிறது.
பெவெட்டக்கலையில் உள்ள கல்வெட்டு ஒன்று மீன் சின்னப் பொறிப்புடன் காணப்படுகிறது. அதில் “காமனியின் பத்து மகன்களில் மூத்தவன் தம்மராசனின் மகன் மகாதிச்சன் செய்து கொடுத்த குகை இது” என்றுள்ளது. பெவட்டக்கலையின் இன்னொரு கல்வெட்டில் “காமனியின் மகன் உதிராசன், அவனின் மகன் அபயன், அவனின் மகள் அனுராதி கொடுத்த குகை” என்று உள்ளது.
மேலும் கொட்டடைமுகலையில் உள்ள ஏழு கல்வெட்டுகள் மீன் சின்ன பொறிப்புடன் பின்வரும் மன்னர்களை பற்றிக் குறிக்கிறது. "தம்மராசனின் மகனான மகாதிச்சனின் மகளும், அபயனின் மகனான திச்சனின் மனைவியும் ஆன சவெரை என்ற இளவரசி கொடுத்த குகை" என்றுள்ளது.
இந்த கல்வெட்டுகளின் உதவியோடும் பௌத்த இலக்கியங்களின் துணையோடும் பின்வரும் காலக்கணிப்புகள் தரப்படுகிறது.
காலக்கணிப்பு:
அநுராதபுரத்தை தேவநாம்பியன் ஆட்சி முடிவிலிருந்து எல்லாளன் பிடிக்கும் வரையிலும், அதே போல் காவண்திச்சன் உருகுணையில் ஆட்சி தொடங்கிய போதும் 62 ஆண்டுகள் ஆகியிருந்தன. காவண்திச்சனின் தந்தை கோதாபயன் 10 உருகுணை அரசர்களை கொன்று ஆட்சியைப்பிடித்தான் எனக் கூறப்படுவதால் அவனும் காவண்திச்சனுக்கு சில ஆண்டுகள் முன் வரை ஆட்சி நடத்தியிருப்பான். (கி.மு. 230 - 205). தேவநாம்பியன் தம்பியான மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்த பிறகே அவன் அசோகனிடமிருந்து போதி மரத்தை வாங்கி விழா எடுத்தான். அக்காலம் தேவநாம்பியன் கடைசி காலமாகும். இவ்விழாவிற்கு உருகுணைத் தலைநகரான மாகாமத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள் என பன்மையிலேயே கூறப்படுவதால் இவர்கள் தான் இந்த பத்து உருகுணை அரசர்கள் எனலாம். உருகுணையின் பத்து சகோதரர்களும் கோதாபயனுக்கு முன் சில ஆண்டுகள் ஆண்டிருப்பார்கள்.(கி.மு.270 – 230).
இவர்களின் தந்தையான காமனி அபயன் சில ஆண்டுகளும் பாட்டனான மஜிமகாராசன் சில ஆண்டுகளும் உருகுணையை ஆண்டிருந்தார்கள் எனக்கூறலாம். "மஜிமஹ" என்னும் பெயர் பொறித்த காசும் காமணி அபயனின் தந்தை 6 கிராமங்களைத் தானமாக கொடுத்ததையும் வைத்து இவர்கள் உருகுணையை முழுதுமாகவும், அநுராதபுர இராச்சியத்தை சாராமலும் ஆண்டார்கள் எனக் கொள்ளலாம்.(கி.மு.320–270) மேலுள்ள காலக்கணிப்பில் இருந்து இவர்களின் ஆட்சியாண்டுகள் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது.
1.
1. 1. மஜிமஹாராஜன் (கி.மு. 320 – 295)
2.2. காமணி அபயன் (கி.மு. 295 - 270)
3.3. தசபாதிகர் எனப்படும் பத்து சகோதரர்கள் (கி.மு. 270 – 230) கோதாபயனால் கொல்லப்பட்டதும் இவர்களே.
4.4. இந்த பத்து சகோதரர்களில் முதல் இருவரின் தலைமுறைகளும் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நாடாண்டதாக கொள்ள இடமில்லை.
இலங்கையில் சமணம்:
மஜிமஹா ராஜன் கொடுத்த தானம் சங்கத்துக்கு கொடுக்கப்பட்டது எனக் கல்வெட்டு கூறுவதால் அந்த சங்கம் எது என ஆராய்தல் வேண்டும். தேவநாம்பிய திச்சனுக்கு முன்னரே மஜிமஹராஜன் ஆண்டதாக கூறுவதால் அக்காலத்தில் இலங்கையில் பௌத்த சங்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் இது சமண சங்கமே எனக் கூறலாம். இதற்கு வழு சேர்க்கும் விதமாக இலங்கையில் "சூடஷமணஹ" என்னும் பிராகிருதப் பிராமி எழுத்துக்களுடன் ஆமை வடிவம் பொறித்த காசே சான்றாகும்.4
மேலும் மஜிமஹராகன் காசில் தன் பெயரைப் பொறித்ததும் அல்லாமல் பின்பக்கத்தில் களிறையும் பொறித்துள்ளான். தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த பாண்டியர் காசுகளில் களிறு, கயல், ஆமை, யானை போன்றவை முக்கியப் பங்கு வகிப்பவை.7 தமிழகத்தில் உள்ள மாங்குளக் கல்வெட்டு நடனகாசிநாதனின் அகரமேறிய மெய் முறைமைப்8 படி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என நிறுவப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் சமணர்களுக்குக் கொடுத்த தானம் பற்றி உள்ளது. அதனால் சமணம் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவி நாலாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் பரவியதாகக் கொள்ள முடியும். தேவநாம்பியன் காலத்திற்குப் பிறகு தென் இலங்கையில் பரவிய பௌத்தம் சமண மத ஆதிக்கத்தை குறைத்திருக்கலாம்.
மீளாய்வுக்கும் புதிய ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டியவை:
1. 1. மஜிமஹாராஜனின் முன்னோர், தெற்கு தென்கிழக்கு இலங்கைப் பகுதிகளில் அரசமைத்த விதமும் காலமும்.
2. 2. இலங்கையில் சமணப்பரவலும், தென்னிலங்கை தமிழகத்தோடு வைத்திருந்த தொடர்பும்.
3.3.மஜிமஹராஜன் அசோகனுக்கு முன்னரே காசுகளையும்4 பிராகிருதக் கல்வெட்டுகளையும் உருவாக்கியதால் அசோகனால் பிராகிருதப் பிராமி உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றமை.
4. 4. தமிழகத்தில் தமிழி எழுத்துக்களின் வளர்ச்சியை அகரமேறிய மெய் முறைமை கொண்டு கணிப்பது போல் மச்சமாராசனின் ஐந்து தலைமுறை அரசர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளை ஆய்ந்து தென்னிலங்கையின் பிராமி எழுத்துக்களுக்கும் முறைமைகளை உருவாக்க வேண்டும்.
மேற்கோள்கள்:
1. 1. ஸ்ரீசாகுசந்தர், தாதுவம்சம், பக்கம் 23-24
2. 2. மகாவம்சம் – 18, 19:54, போதி மரம் நிறுவுதல்.
3.3. Inscriptions Of Ceylon – Part I, Plate Numbers 406 (Henenagala), Plate No’s 549, 550, 551 (Bevettagala Inscriptions), Plate No’s 564, 565, 568, 569 (Kottatamuhela Inscriptions)
5.5. The titles of Sinhalese Kings as recorded in the inscriptions of 3rd century B. C. 3rd century A. C., Nicholas, C. W., 1949, University of Ceylon Review Vol.VII, No.4,1949 , pp 235-248
6.6. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு – 2, பக்கம் 211 – 218, சென்னை: மீனா கோபால் பதிப்பகம்.
7.7. ப. சண்முகம் (2003) சங்கக்காலக் காசு இயல், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (பக்கம் 32-46)
8. தமிழ் விக்கிப்பீடியா, அகரமேறியமெய்முறைமை, நடனகாசிநாதன், ஐ,மகாதேவன், மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் கூறிய அகரமேறிய மெய் முறைமை குறிப்புகளை
No comments:
Post a Comment