Monday, 12 October 2015

கொரியாவின் காயா அரசை தோற்றுவித்த தமிழ் இளவரசி

கொரியாவின் காயா அரசை தோற்றுவித்த சுரோ என்ற இளவரசரின் துணைவியாள் இயோ எனப் பெயர் பெற்ற ~ஆய்~ நாட்டு இளவரசியாக கொரிய கதைகளில் குறிக்கப்படுகிறாள். இவளின் கூட்டம் காரா எனப்படும் கூட்டம். இவளின் சின்னம் இரட்டை மீன் சின்னம்.

இதை ஆராய்ந்த வடநாட்டு ஆய்வாளர்கள் இந்த கொரிய இளவரசி உத்திரப்பிரதேச அயோத்தியாவைச் சேர்ந்தவர் எனக் கதை அளந்து வருகின்றனர். அதுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தின் """தற்போதையச்""" சின்னமும் இரட்டை மீனாம். அயோத்தியா பெயர் ~ஆய்~ என்னும் பெயருடன் ஒத்து வருகிறதாம். அதனால் இவள் அயோத்தியாக்காரியாம். ஆனால் அம்மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டுகளடையது என்பதை வடநாட்டார் மறைத்துவிட்டனர்.

ஆனால் நம்ம பாண்டிய நாடு 2600 ஆண்டுகள் முன்பிருந்தே மீன் சின்னத்தை பொறித்ததற்கு ஏராளமான காசுகள் உள்ளன. அதிலும் பாண்டியர் கீழிருந்த பரவர்கள் கொரியாவில் உள்ளது போலவே இரட்டை மீனைப் பொறித்துக்கொண்டனர். மதுரைப் பாண்டியர் சங்ககாலத்தில் ஒரு மீனைப் பொறித்தாலும்  கொற்கைப் பாண்டியர் இரண்டு மீன்களைப் பொறித்தனர். அதனால் பாண்டிய நாட்டின் கீழிருந்த முதலாம் நூற்றாண்டு ஆய் நாட்டு பரவர்களே இரட்டை மீன் சின்னங்களை கொரியாவிற்கு கொண்டு போயிருக்க வேண்டும்.

ஏற்கனவே இது தொடர்பாக கடலியல் ஆய்வாளர் @Orissa Balu மும்முரமாக ஆய்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக என் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் ஈழத்தில் பரதவர்கள் வெளியிட்ட காசு ஒன்றில் கொரியாவில் உள்ளது போல் இரட்டை மீன்கள் இருக்கும் சங்ககாலக் காசு ஒன்றை காட்டியுள்ளேன். கொற்கை செழியன் வெளியிட்ட இரண்டு மீன்கள் கொண்ட காசையும் காட்டியுள்ளேன். ஆனால் இது கொரிய மீன் சின்னத்தில் இருந்து வேறுபட்டது. அதே சமயம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தை குறிக்கும் தொலெமி ஆயர்களுக்கு கீழே தென்பாண்டி நாடு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆக ஆய் நாட்டைச் சேர்ந்த பரதவர்களே கொரியாவில் இச்சின்னத்தை கொண்டு போயிருக்க வேண்டும். காரணம் கொரியாவின் தமிழ் இளவரசியின் மரபு காரா என்னும் கூட்டத்தைச் சேர்ந்தது. ~ஆய்~ என்னும் நாட்டைச் சேர்ந்த மரபாக இது கொரிய இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. அந்த காரா என்னும் பெயரில் தென் தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் கரையார் என்பவர்களே குறிப்பிடுகின்றனர். பாலியில் இவர்களை காரவா என்பர். இந்த காராக் கூட்டத்தை கொரியாவில் காயா என்றும் அழைப்பர். இதுவும் கூட காயல் என்னும் பெயரைக் குறிப்பதாக கொள்ளலாம். 

ஆக கொரியாவின் இளவரசி தமிழச்சியே தவிர உத்திர பிரதேசத்தவள் அல்ல.
இது தொடர்பான என் ஆய்வுக்கட்டுரை நவம்பர் 6 2015 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வரங்கில் வெளியாகாவிட்டால் முகநூலில் கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வெளியிடப்படும்.
நம்ம ஆய்நாட்டு பரவர்களின் சின்னமான இரட்டை மீன்களை தான் ஆய்நாட்டுக்காரி எனக் காட்ட கொரியாவின் தமிழ் இளவரசி இரட்டை மீன்களை பொறித்துக் கொண்டாள். ஆனா இந்த வடநாட்டுக்காரங்க எழுதுனது என்னன்னா "உத்திரப் பிரதேச அரசு சின்னத்தில் இரு மீன்களும் வில்லும் இருப்பதால் அந்த கொரிய இளவரசி உத்திர பிரதேச அயோத்தியோ நாட்டுக்காரி" என்று. அந்த உத்திரப் பிரதேச சின்னம் எப்போது இருந்து பொறிக்கப்பட்டதுன்னு ஏதாவது வரலாறு தெரியுமா? 
அந்த உத்திர பிரதேச மீன் சின்னம் நவாப்களுடையது. அதுவும் 19ஆம் நூற்றாண்டு. நவாப் அறிமுகப்படுத்திய போது அச்சின்னம் கீழுள்ள இணைப்பில் உள்ளது போல் இருந்தது.
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/46/%E0%A4%85%E0%A4%B5%E0%A4%A7_%E0%A4%AE%E0%A5%8B%E0%A4%B9%E0%A4%B0.jpg
டைம்சு ஆஃப் இந்தியாவில் உத்திர பிரதேச மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டில் தான் வந்தது எனக் காட்டும் கட்டுரை இணைப்பு கீழே.
http://timesofindia.indiatimes.com/city/lucknow/The-emblem-story/articleshow/201009.cms
LUCKNOW: The state emblem of Uttar Pradesh owes its origin to the Royal Society in the United Kingdom, which approved the symbol in 1916. The 'Coat of Arms' adorning all UP government files, letterheads and vehicles and other government stationery, including its publications using it as seal, has an underlined idea.
Unveiling this quite an unknown idea first suggested by Mr Baker, assistant director of UP state archives, Dr Sandhya Nagar, says the combination of a "pair of fish" and the arrow-bow, embellished with three waves stresses on 'Unity in diversity'.
Dr Nagar said the symbolism attached with each of these characters marked their presence in the logo, the pair of fish with the Muslim rulers of Oudh while the bow and arrow identifying Hindu Lord Ram while the waves marked the confluence of the rivers Ganga-Yamuna.
The proposed logo also contained a star at the bottom, which was deleted later. "The symbol is a vivid representation of geographical, historical and cultural integrity of Uttar Pradesh," Dr Nagar said.
The UP state archives boasts of possession of the documents which fortified the requests made by the then national leaders, especially Govind Ballabh Pant, for implementation of the state symbol.
The documents also show the resistance on the part of the then state offices, especially Sir Harry Graham Haig, the governor of the state, to enforce the emblem which had already seen a green signal from the Royal Commission. Dr Nagar said the proposal had gone across "several oppositions and a few changes before implemented on August 9, 1938. It was with the efforts of an adamant Pant that the state owns the emblem with pride".


Friday, 26 December 2014

வேளிர் தோன்றியது பொதிகை மலையிலேயே. - 1



வேளிர் வடக்கில் இருந்து வந்தனர் என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய கருதுகோளாகும்.

"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி"

வடபால் முனிவன் தடவினுள் தோன்றி என்று தான் ஓலை படிக்கப்பட்டது. ஆனால் தடவினுள் என்ற சொல்லில் வரும் 5 எழுத்துக்களுக்குப் பதிலாக நான்கு எழுத்துக்களே உள்ளன. மேலும் அகத்தியர் வடமொழி புராணங்களில் வேளிரை அழைத்துவந்ததாக யாதொரு சான்றும் இல்லை. அப்படி ஏதும் சான்றிருந்தால் தரவும்.

வடபால் முனிவன் தடவினுள் தோன்றி என்ற வரிகள் வரும் சொற்கள் அட்டச்மென்டில் என்னால் வட்டமிடப்படுள்ளது. பார்க்கவும். மேலும் இதில் துவரை எனக்கூறப்பட்டது தென்னக துவரங்குறிச்சி அல்லது துவாரசமுத்திரமே அன்றி கண்ணன் ஆண்ட துவாரகை அல்ல.

வேளிர் என்போர் முல்லை நிலம் உருவாகிய காலத்தில் அங்கு புதிய கற்காலம் முதலே திணை, கம்பு, வரகு போன்ற தானிய்னக்களை பயிரிட்டு வாழ்ந்தோர் ஆவர். ஈழத்திலும் வேளிர் வாழ்ந்த இடங்கள் அப்படித்தான் உள்ளன. அதனால் வேளிர் வடக்கில் இருந்து வந்தனர் என்பது அடிப்பட்டுப் போகிறது. மேலும் தடவினுள் வேளிர் தோன்றுவது என்று உலகமகா கற்பனையை ஒட்டி இன்னும் வரலாறு எழுதிக்கொண்டிருப்பது தமிழக வரலாற்றுத்துறைக்கே இழுக்காகும்.

http://www.tamilvu.org/library/suvadi/s128/images/s1280932.jpg

இது பாண்டியர் வரலாறு பற்றிய வர்லாறு மட்டும் கூறும் தளமாக இருந்தாலும் வேளிரை விளக்காமல் பாண்டியர் தோற்றம் பற்றி விவரிக்க முடியாது என்பதால் இப்பதிவும் இங்கு இடம்பெறுகிறது. அடுத்த பதிவில் வேளிரின் மூலம் பற்றிப் பார்க்கலாம்.

Friday, 23 May 2014

அது என்னப்பா அசோகப் பிராமி?

முதல் அசோகப்பிராமி என்பதே தவறான சொலவடை. அசோகன் கல்வெட்டில் உள்ள பிராகிருத மொழிகளின் ஒன்றில் எழுதப்பட்ட வரிவடிவம் அசோகனுக்கு 2 தலைமுறைக்கு முன்னரே இலங்கையில் மச்சமாராசனால் பதிக்கப்பட்டுவிட்டது. அசோகன் காலத்திலேயே பௌத்தம் ஈழம் சென்றதால் அவனுக்கு இரண்டு தலைமுறை முன் கூறப்படும் ஈழத்து மச்சராசன் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சங்கம் சமணருடையதாக்வே இருக்க வேண்டும்.

இந்த மஜிமக அரசனின் காசு அவன் சமணத்தை ஆதரிக்கும் முன்னர் அச்சிடப்பட்டது. அதன்பிறகு உருகுணைப் பகுதியில் சமணர்காசுகள் ஏறக்குறைய 4 கண்டறியப்பட்டுள்ளன. தேடினால் இன்னும் கிடைக்கலாம்.



மேலுள்ள கல்வெட்டு மச்சராசன் சமணத்தை ஆதரித்தபின்னர் அவர்களுக்கு கொடுத்த சங்கத்தை பற்றியது.
கல்வெட்டு வரிகள்:

காமணி திசக பிதக மஜ்ஜி மாராஜாக சபரிபோகனி சாகசகிரிதிச்சகாமெ வெளிகமெ கசபநகரே மலுகமே நொக்கபிகெ

பொருள்:
காமணி திச்சனின் தந்தையான மச்சமகாராசன் கிரிதிச்சா, கரஜகிதிச்சா, வெளிகமா (தற்போதைய வெளிகமை) கசப நகரே (காசியப்ப நகரம்), மலுகமை, நொக்கபிக போன்ற கிராமங்களை சங்கத்துகுக் கொடுத்தான்.

இந்த காமணி திச்சனின் மகன்களே உருகுணை கல்வெட்டுகளில் கூறப்படும் தசாபாதிகர் என்ற பத்து சகோதரர்கள். இவர்களைக் கொன்றே துட்டகைமுனுவின் தாத்தாவான கோத்தபயா (இங்கும் ஒரு கோத்தபயா) உருகுணையை கைப்பற்றினான். இந்த கோத்தப்யா தான் அசோகனோடு நட்புகொண்டு பௌத்தத்தை ஈழத்துக்கு அறிமுகப்படுத்திய தேவநாம்பியனின் தம்பியான மகாநாகனின் இரண்டாவது மகன்.

தேவநாம்பியன் திச்சன் கடைசி ஆட்சியாண்டில்தான் புத்தம் ஈழத்துக்கு அறிமுகமானது. இதில் அசோகன் ஆட்சி வேறு தேவநாம்பி திச்சனின் இறுதிக்காலத்திலே தொடங்குகிறது.

சோகனுக்கு இரண்டு தலைமுறை முன்னர் பிராகிருத காசை வெளியிட்ட மச்சமகாரசன் ஒருத்தன் இருக்கும் போது எப்படி அசோகன் பிராகிருதப் பிராமியை கன்டறிந்ததாக ஆகும்?

தமிழகத்தில் கொடுமணலில் கிடைத்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பானையோட்டு பொறிப்புகள் தமிழி அல்ல என்கிறார்கள். அதில் ழ,ள, ற,ன இல்லை என்பதால் அப்படி சொல்கிறார்கள். சரி விடலாம். அது பிராகிருதமாகவே இருக்கட்டும். அப்போது கி.மு. 500இலேயே தோற்றம் பெற்ற பிராமி எப்படி கி.மு. மூண்றாம் நூற்றாண்டில் பிறந்த அசோகனுக்கு சொந்தமானது? அசோகப்பிராமியாவது மன்னாங்கட்டியாவது. போங்கடா போங்க.

கீழுள்ளது உருகுணைப்பாண்டியர்களின் ஆட்சிக்காலமும் அவர்களிடம் இருந்து சிங்களர்கள் உருகுணையை கவர்ந்து ஆட்சி நடத்திய காலங்களும். இந்த அட்டவணையை யாராவது தவறென நிரூபித்துவிட்டு அப்புறம் அசோகப்பிராமி மௌரிய பிராமின்னு கதவிடுங்க.








Wednesday, 15 January 2014

இலங்கையில் சமணர்

தலைப்பே பெருஞ்சிக்கல் போல் தெரியலாம். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கலால் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு வரலாற்றுச் சான்றை கொடுத்துவிட்டு வந்தால் ஓரளவு முடிசுகள் அவிழும்.

இலங்கையில் வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமணரின் (தமிழரா என்பது வேறு) முதல் படையெடுப்பின்/ஆதிகத்துக்கான சான்று கி.பி. ஐந்தாம் நூற்றாண்டே.

நிகந்தர்


நிகந்தர் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டை ஆண்டவர்களாகக் கருதப்படும் ஒரு அரசவம்சத்தினர் ஆவர். நிகந்தர் என்பதற்கு சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இவர்கள் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் மூன்றாமானவனான முதலாம் மொக்கல்லானன் என்பவனுக்கு மொக்கல்லானனின் மாற்றாந்தாய் மகனும் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் இரண்டாமனவனுமான முதலாம் காசியப்பன் என்றவனை எதிர்ப்பதற்கு உதவினார்கள்.

நிகந்தர்கள் யார்?


* இலங்கை மௌரிய மன்னர்கள் வழிவந்தவர்கள் இலங்கையை ஆண்ட போது இவர்கள் தமிழ்நாட்டை ஆண்டதாக சூல வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூலில் கூறப்படுவதால் இவர்களின் காலம் பொ.பி. 450 - 550 என்று கூறலாம்.
* நிகந்தர் என்பதற்கு சமணர் என்ற பொருள்படுவதால் இவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.
* அதேசமயம் களப்பிரர் என்ற தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் சமண சமயத்தையே ஆதரித்தனர்.
* அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்களும் பௌத்தம் என்ற புத்தமதத்திற்கே அதிகம் ஆதரவளித்தனர்.

நிகந்தர்கள் களப்பிரர்களே



* இலங்கை மௌரிய மன்னர்கள் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் களப்பிரர் கையே ஓங்கியிருந்தது.
* இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் முதலாமானவனான தாதுசேனன் என்பவன் பாண்டியர் வம்சத்துள் இலங்கை இராசராட்டிரம் பகுதியை ஆண்ட ஆறு இராசராட்டிரப் பாண்டியர்களிடமும் போரிட்டவன். அதனால் மொக்கல்லானனுக்கு பாண்டியர்களின் உதவி கிடைத்திருக்க நியாயமில்லை.
* மேலும் நிகந்தர்கள் பெரும்படையை உதவிக்கு அனுப்பினர் என்று கூறப்படுவதால் இவர்கள் பாண்டியர்களாக இருக்க முடியாது. அக்காலத்தில் பாண்டியர்கள் களப்பிரர் ஆட்சிக்கு கீழிருந்தனர். அதனால் களப்பிரர்களே பெரும்படையை வைத்திருக்கக் கூடும்.

மேற்கொடுத்த தகவல்களை கொண்டு நிகந்தர்கள் களப்பிரர்களே என்று மயிலை சீனி. வேங்கடசாமி நிறுவுகிறார்.

இதைப் போன்று வேறு சில சமண சமய மன்னர்களும் இலங்கைக்கு படை எடுத்திருக்கலாம். இல்லை இங்கிருந்து சென்ற வணிகர்கள் அங்கு சமணத்தை பரப்பி அதை ஆதரித்த குலம் ஏதாவதும் இலங்கையில் இருந்திருக்கலாம்.

ஆனால் என் "உருகுணைப் பாண்டியர்கள்" ஆய்வுக்கட்டுரையில் கூறப்படும் இலங்கையில் நடந்த சமணப் பரவல் என்பது கி.மு. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். உருகுணைப் பகுதியில் கிடைத்த காசுகளையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த போது அப்பகுதியில் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முன் வரை ஒரு பலம் வாய்ந்த பாண்டிய இராச்சியம் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் கொடுத்த குகைத்தானம் சமண சமயம் சார்ந்த்தாக இருக்கலாம்.

உருகுணைப் பாண்டியர்கள்


உருகுணைப் பாண்டியர்களில் அறியப்படும் முதல் வேந்தனான மஜிமஹா ராஜன் கொடுத்த தானம் சங்கத்துக்கு கொடுக்கப்பட்டது எனக் கல்வெட்டு கூறுவதால் அந்த சங்கம் எது என ஆராய்தல் வேண்டும். தேவநாம்பிய திச்சனுக்கு முன்னரே மஜிமஹராஜன் ஆண்டதாக கூறுவதால் அக்காலத்தில் இலங்கையில் பௌத்த சங்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் இது சமண சங்கமே எனக் கூறலாம். இதற்கு வழு சேர்க்கும் விதமாக இலங்கையில் "சூடஷமணஹ" என்னும் பிராகிருதப் பிராமி எழுத்துக்களுடன் ஆமை வடிவம் பொறித்த காசே சான்றாகும்.1

       மேலும் மஜிமஹராகன் காசில் தன் பெயரைப் பொறித்த‌தும் அல்லாமல் பின்பக்கத்தில் களிறையும் பொறித்துள்ளான். தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த பாண்டியர் காசுகளில் களிறு, கயல், ஆமை, யானை போன்றவை முக்கியப் பங்கு வகிப்பவை.2 தமிழகத்தில் உள்ள மாங்குளக் கல்வெட்டு நடனகாசிநாதனின் அகரமேறிய மெய் முறைமைப்3 படி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என நிறுவப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் சமணர்களுக்குக் கொடுத்த தானம் பற்றி உள்ளது. அதனால் சமணம் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவி நாலாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் பரவியதாகக் கொள்ள முடியும். தேவநாம்பியன் காலத்திற்குப் பிறகு தென் இலங்கையில் பரவிய பௌத்தம் சமண மத ஆதிக்கத்தை குறைத்திருக்கலாம்.


இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் 9ஆமைகள் சுற்றுகின்றன. முன்னால் கபதிக சமணசபுதசட‌கடக என்றுள்ளது. கபதி என்றால் பிராகிருதத்தில் குடும்பம் என்று பொருள். சேர்த்துப் படித்து பொருள் உணர்ந்தால் இதை சமனாச குடும்பத்தலைவனின் மகன் சடகன் கொடுத்தவை என பொருள் தரும்.

ஆகையால் சமணம் இலங்கையில் பௌத்தம் பரவுவதற்கு முன்னரே இருந்தது என்று உறுதியாகக் கூற இயலும். 

மேற்கோள்கள்:

1. ஈழத்தமிழரின் பண்டைய கால நாணயங்கள், புட்பரத்னம்-2001, பக்கம்– 49, 53

2. ப. சண்முகம் (2003) சங்கக்காலக் காசு இயல், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (பக்கம் 32-46)
3.தமிழ் விக்கிப்பீடியா, அகரமேறிய மெய் முறைமை, நடனகாசிநாதன், ஐ.மகாதேவன், மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் கூறிய அகரமேறிய மெய் முறைமை குறிப்புகளை தொகுத்து எழுதப்பட்ட கட்டுரை
(இணைப்பு: http://ta.wikipedia.org/wiki/அகரமேறிய_மெய்_முறைமை)

Friday, 27 December 2013

கச்சமும் களிறும் கயலும் குதிரையும் கொண்ட கவுரியர் காசுகள்

கச்சம் - ஆமை

களிறு - யானை

கயல் - மீன்

கவுரியர் - பாண்டியர்

இவ்வளவு விளக்கம் எதற்கு?

காரணம் பல இருக்கு.

களிறு

மொழிப்பெயர் தேயத்தில் (பண்டைய தமிழகமும் ஈழமும்) யானையை சின்னமாக கொண்டு காசுகளைப் பொறித்த மன்னர்கள் யார்? யார்?

முதலில் பாண்டியர்.

இரண்டாவது சேரர்.

மூன்றாவது மஜ்ஜிமகாராசனின்  வழிவந்த உருகுணையை ஆண்ட மன்னர்கள். என் மொழியில் உருகுணை பாண்டியர்கள். இவர்கள் மட்டுமே களிற்றுக்காசுகளை வெளியிட்டார்கள்.

சோழர் புலியையும் வேறு சின்னங்களைக் கொண்டும் சிங்களவர் சிங்கமும் வேறு சின்னங்களைக் கொண்டும் காசுகளை வெளியிட்டார்கள்.

கயல்

கயல் பொறித்தக் காசுகளை பாண்டியர் மட்டுமே பண்டைய மொழிப்பெயர் தேயத்தில் வெளியிட்டனர்.

கச்சம் - ஆமை

கச்சம் பொறித்தக் காசுகளை பாண்டியர் மட்டுமே பண்டைய மொழிப்பெயர் தேயத்தில் வெளியிட்டனர்.

குதிரை

குதிரையைச் சின்னமாகப் பொறித்துக்கொண்டு அனைவருமே காசுகளை வெளியிட்டார்கள். குறுநில மன்னர்களான மலையமான்கள் கூட குதிரை முத்திரையோடு காசுகளை வெளியிட்டார்கள்.

மன்னர்கள் மட்டும் தான் காசுகளை வெளியிட்டார்களா?

நிச்சயம் இல்லை வணிகர்களும் இட்டார்கள். ஆனால் அவற்றுள் யானையை சின்னமாக வைப்பதில்லை. தங்கள் குல முத்திரைகளை இட்டார்கள். மதம் தொடர்பானவர்களும் இட்டார்கள். இதை நான் கூறுவதற்கு காரணம் ஆமை பொறித்த காசுகளை மொழிப்பெயர் தேயத்தில் இரண்டே மரபைச் சேர்ந்தவர்கள் தான் இட்டார்கள். ஒன்று பாண்டியர். இன்னொன்று உருகுணையில் உள்ள ஒரு குலத்தோர். பாண்டியர் தவிர்த்து உருகுணையில் மொத்தம் மூன்று காசுகள் ஆமை தொடர்பானவை. அவை மூன்றும் கீழே உள்ளன. இவற்றில் உள்ள ஒற்றுமையை வைத்துத்தான் நான் அடுத்த பதிவான இலங்கையில் சமணர் என்ற பதிவை இடப்போகிறேன்.


இதில் சூடஷமனஹ என்னும் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கு நடுவே ஒரு ஆமை உள்ளதை கவனியுங்கள். இவர்கள் அரசர்களாக இருக்க வாய்ப்பில்லை. வணிகர்களாகவோ சமணம் தொடர்பானவர்களோ அல்லது உருகுணைப் பாண்டியர்கள் தொடர்பானவர்களாகவோ இருக்கலாம்.


இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். ஆமையின் வடிவத்திலேயே உள்ள தெளிவற்ற  பிராமி எழுத்துகள் பொறித்த காசு.

இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் ஓன்பது ஆமைகள் சுற்றுகின்றன. முன்னால் கபதிகசமணசபுதசட‌கடக என்றுள்ளது. கபதி என்றால் பிராகிருதத்தில் குடும்பம் என்று பொருள். சேர்த்துப் படித்து பொருள் உணர்ந்தால் இதை சமனாச குடும்பத்தலைவனின் மகன் சடகன் கொடுத்தவை என பொருள் தரும்.

இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் ஆமை ஒன்று. முன்னால் தேவாளபூச என்று எழுதியிருப்பதாக கூறுகின்றனர். இதில் ஆறெழுத்து உள்ளது. ஆனால் ஐந்தை தான் படித்திருக்கின்றனர். ள.ழ,ற,ன என்ற நான்கு எழுத்துக்களும் தமிழ் பிராமிக்கே ஊரியது. அதனால் நான் அந்த ஆறாவது எழுத்தையும் சேர்த்து தேவாளபூதன் எனப்படிக்கின்றேன். காரணம் தமிழ் பெயர் பெரும்பாலும் அன் விகுதியில் முடியும்.

உருகுணைப் பாண்டியர்கள்

இந்த வலைபூவை வாசிக்கும் அனைவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்.

இன்று குற்றாலத்தில் நடந்த சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்திய விழாவில் என் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது. ஆய்வின் தலைப்பு இதுதான்.

"உருகுணை பாண்டியர்கள்"

இந்த கட்டுரையை கீழே தந்திருக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை படிக்கும் முன்பு முக்கியம் சில செய்திகளை படிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இதழில் வெளியைடப்படும் கட்டுரைகள் அனைத்தும் 5 ஏ4 பக்கங்களுக்கு மிகாமல் சில அளவு எழுத்துரு விதிகளைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்த படியால் என்னால் முழுவிவரங்களையும் தொகுக்க இயல்வில்லை. முழு விவரங்களும் இதே வலைபூவில் அடுத்த பதிவில் போடுகிறேன்.

ஆனால் நான் இந்த கட்டுரை மூலம் விவாதிக்க விரும்பும் 5 விடயங்கள் மிக முக்கியமானவை. அதை எதிர்பார்த்து தான் இக்கட்டுரையை பொதுவெளியில் பகிர்கிறேன்.

இனி கட்டுரைக்கு போகலாம்.

உருகுணை பாண்டியர்கள்

அறிமுகம்:

உருகுணையை தேவநாம்பிய திச்சனின் (கி.மு.307 - கி.மு.267) தம்பியான மகாநாகனுக்கு முன்னர் ஆண்ட மன்னர்களை பற்றி இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சமும் தீபவம்சமும் சான்றுகளை தரவில்லை. ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட தாதுவம்சம்1 என்னும் நூல் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. மகாவம்சம் இவர்களை பற்றி நேரடியான தகவல்களை தராவிட்டாலும் தேவநாம்பியன் எடுத்த விழாவுக்கு உருகுணையின் தலைநகரான கதிர்காமத்தின் மன்னர்கள் வந்தார்கள் என்ற குறிப்பை மட்டும் தருகிறது.2 இந்த உருகுணை மன்னர்கள் வெளியிட்ட 16 கல்வெட்டுகளும்3 ஒரு காசும்4 பௌத்த இலக்கியங்களும் இவர்களின் வரலாற்றை அறிவதற்கு உதவியாய் உள்ளன.

உருகுணை மன்னர்கள் பாண்டியர்களே:


உருகுணையை மகாநாகன் காலத்துக்கு முன் ஆண்ட மன்னர்கள் பாண்டியர்களே என்பதற்கு அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளில் உள்ள குலக் குறீயீடான மீன் பொறிப்பும், அவர்கள் வெளியிட்ட காசுக்கும் தமிழக பாண்டியர்களின் காசுகளுக்கும் உள்ள ஒற்றுமையும், கல்வெட்டுகளிலும் காசிலும் அவர்களின் பெயரான மஜிமஹராஜா என்று வரும் மீனை நினைவுப்படுத்தும் பெயரும், அவற்றில் காணப்படும் குலக்குறியீடான மீன் சின்னமுமே சான்றுகளாம். இவர்களைப் பற்றி வெளியிட்ட வரலாற்று நூலாசிரியர்கள் இவர்கள் தமிழகத்தவர்5 என்றும் பாண்டியர்கள்6 என்றும் கூறியுள்ளனர்.

அடைக்கலம் புகுந்த சிங்களவர் வரலாறு:

வட இலங்கையை ஆண்ட தேவநாம்பிய திச்ச‌னுக்கு பல தம்பிகள் இருந்தார்கள். தேவநாம்பியனின் மனைவி தன் மகனை அடுத்த அரசனாக்க வேண்டும் என்பதற்காக மகாநாகனை கொல்ல முயன்றாள். இதை அறிந்த மகாநாகன் உருகுணை அரசர்களிடம் அடைக்கலம் ஆனான். அவனுக்கு அட்டாலயதிச்சன், கோதாபயன் என இரு மகன்கள் இருந்தனர். கோதாபயன் தன் மகனான காகவண்ண தீச்சனை உருகுணைக்கு அரசனாக்க ஆசைப்பட்டு உருகுணையின் மன்னர்கள் குலத்தை அழித்தான். அந்த பாவத்தை போக்குவதற்கு பௌத்த விகாரைகளை கட்டினான் என்கிறது தாதுவம்சம் என்னும் நூல்.2

கல்வெட்டுகள் காட்டும் பாண்டியர் வரலாறு3:

தென்னிலங்கையின் கெனனக்கலையில் உள்ள பிராகிருதக் கல்வெட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டதுடன் காமனி திச்சனின் தந்தையான மச்சமகாராஜன் கிரிதிட்டை, கரசகினிதிட்டை, வெளிகாமை, காசியப்பநகரம், மலுகாமம் மற்றும் நொக்கபிகம் போன்ற ஊர்களை சங்கத்துக்கு தானமளித்தான் எனக் கூறுகிறது.
பெவெட்டக்கலையில் உள்ள கல்வெட்டு ஒன்று மீன் சின்னப் பொறிப்புடன் காணப்படுகிறது. அதில் “காமனியின் பத்து மகன்களில் மூத்தவன் தம்மராசனின் மகன் மகாதிச்சன் செய்து கொடுத்த குகை இது” என்றுள்ளது. பெவட்டக்கலையின் இன்னொரு கல்வெட்டில் “காமனியின் மகன் உதிராசன், அவனின் மகன் அபயன், அவனின் மகள் அனுராதி கொடுத்த குகை” என்று உள்ளது.
மேலும் கொட்டடைமுகலையில் உள்ள ஏழு கல்வெட்டுகள் மீன் சின்ன பொறிப்புடன் பின்வரும் மன்னர்களை பற்றிக் குறிக்கிறது. "தம்மராசனின் மகனான மகாதிச்சனின் மகளும், அபயனின் மகனான திச்சனின் மனைவியும் ஆன‌ சவெரை என்ற இளவரசி கொடுத்த குகை" என்றுள்ளது.



இந்த கல்வெட்டுகளின் உதவியோடும் பௌத்த இலக்கியங்களின் துணையோடும் பின்வரும் காலக்கணிப்புகள் தரப்படுகிறது.

காலக்கணிப்பு:

அநுராதபுரத்தை தேவநாம்பியன் ஆட்சி முடிவிலிருந்து எல்லாளன் பிடிக்கும் வரையிலும், அதே போல் காவண்திச்சன் உருகுணையில் ஆட்சி தொடங்கிய போதும் 62 ஆண்டுகள் ஆகியிருந்தன. காவண்திச்சனின் தந்தை கோதாபயன் 10 உருகுணை அரசர்களை கொன்று ஆட்சியைப்பிடித்தான் எனக் கூறப்படுவதால் அவனும் காவண்திச்சனுக்கு சில ஆண்டுகள் முன் வரை ஆட்சி நடத்தியிருப்பான். (கி.மு. 230 - 205). தேவநாம்பியன் தம்பியான மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்த பிறகே அவன் அசோகனிடமிருந்து போதி மரத்தை வாங்கி விழா எடுத்தான். அக்காலம் தேவநாம்பியன் கடைசி காலமாகும். இவ்விழாவிற்கு உருகுணைத் தலைநகரான மாகாமத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள் என‌ பன்மையிலேயே கூறப்படுவதால் இவர்கள் தான் இந்த பத்து உருகுணை அரசர்கள் எனலாம். உருகுணையின் பத்து சகோதரர்களும் கோதாபயனுக்கு முன் சில ஆண்டுகள் ஆண்டிருப்பார்கள்.(கி.மு.270 – 230).
இவர்களின் தந்தையான காமனி அபயன் சில ஆண்டுகளும் பாட்டனான மஜிமகாராசன் சில ஆண்டுகளும் உருகுணையை ஆண்டிருந்தார்கள் எனக்கூறலாம். "மஜிமஹ" என்னும் பெயர் பொறித்த காசும் காமணி அபயனின் தந்தை 6 கிராமங்களைத் தானமாக கொடுத்ததையும் வைத்து இவர்கள் உருகுணையை முழுதுமாகவும், அநுராதபுர இராச்சியத்தை சாராமலும் ஆண்டார்கள் எனக் கொள்ளலாம்.(கி.மு.320–270) மேலுள்ள காலக்கணிப்பில் இருந்து இவர்களின் ஆட்சியாண்டுகள் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது.
1.
1.  1.  மஜிமஹாராஜன் (கி.மு. 320 – 295)
2.2.   காமணி அபயன் (கி.மு. 295 - 270)
3.3. தசபாதிகர் எனப்படும் பத்து சகோதரர்கள் (கி.மு. 270 – 230) கோதாபயனால் கொல்லப்பட்டதும் இவர்களே.
4.4. இந்த பத்து சகோதரர்களில் முதல் இருவரின் தலைமுறைகளும் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நாடாண்டதாக கொள்ள இடமில்லை.

இலங்கையில் சமணம்:

      மஜிமஹா ராஜன் கொடுத்த தானம் சங்கத்துக்கு கொடுக்கப்பட்டது எனக் கல்வெட்டு கூறுவதால் அந்த சங்கம் எது என ஆராய்தல் வேண்டும். தேவநாம்பிய திச்சனுக்கு முன்னரே மஜிமஹராஜன் ஆண்டதாக கூறுவதால் அக்காலத்தில் இலங்கையில் பௌத்த சங்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் இது சமண சங்கமே எனக் கூறலாம். இதற்கு வழு சேர்க்கும் விதமாக இலங்கையில் "சூடஷமணஹ" என்னும் பிராகிருதப் பிராமி எழுத்துக்களுடன் ஆமை வடிவம் பொறித்த காசே சான்றாகும்.4
       மேலும் மஜிமஹராகன் காசில் தன் பெயரைப் பொறித்த‌தும் அல்லாமல் பின்பக்கத்தில் களிறையும் பொறித்துள்ளான். தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த பாண்டியர் காசுகளில் களிறு, கயல், ஆமை, யானை போன்றவை முக்கியப் பங்கு வகிப்பவை.7 தமிழகத்தில் உள்ள மாங்குளக் கல்வெட்டு நடனகாசிநாதனின் அகரமேறிய மெய் முறைமைப்8 படி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என நிறுவப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் சமணர்களுக்குக் கொடுத்த தானம் பற்றி உள்ளது. அதனால் சமணம் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவி நாலாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் பரவியதாகக் கொள்ள முடியும். தேவநாம்பியன் காலத்திற்குப் பிறகு தென் இலங்கையில் பரவிய பௌத்தம் சமண மத ஆதிக்கத்தை குறைத்திருக்கலாம்.

மீளாய்வுக்கும் புதிய ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டியவை:

1.  1.  மஜிமஹாராஜனின் முன்னோர், தெற்கு தென்கிழக்கு இலங்கைப் பகுதிகளில் அரசமைத்த விதமும் காலமும்.
2.   2. இலங்கையில் சமணப்பரவலும், தென்னிலங்கை தமிழகத்தோடு வைத்திருந்த தொடர்பும்.
3.3.மஜிமஹராஜன் அசோகனுக்கு முன்னரே காசுகளையும்4 பிராகிருதக் கல்வெட்டுகளையும் உருவாக்கியதால் அசோகனால் பிராகிருதப் பிராமி உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றமை.
4.  4. தமிழகத்தில் தமிழி எழுத்துக்களின் வளர்ச்சியை அகரமேறிய மெய் முறைமை கொண்டு கணிப்பது போல் மச்சமாராசனின் ஐந்து தலைமுறை அரசர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளை ஆய்ந்து தென்னிலங்கையின் பிராமி எழுத்துக்களுக்கும் முறைமைகளை உருவாக்க வேண்டும்.

 மேற்கோள்கள்:

1. 1. ஸ்ரீசாகுசந்தர், தாதுவம்சம், பக்கம் 23-24
2. 2. மகாவம்சம் – 18, 19:54, போதி மரம் நிறுவுதல்.
3.3. Inscriptions Of Ceylon – Part I, Plate Numbers 406 (Henenagala), Plate No’s 549, 550, 551 (Bevettagala Inscriptions), Plate No’s 564, 565, 568, 569 (Kottatamuhela Inscriptions)
4. 4. ஈழத்தமிழரின் பண்டைய கால நாணயங்கள், புட்பரத்னம்-2001, பக்கம்– 49, 53

5.5. The titles of Sinhalese Kings as recorded in the inscriptions of 3rd century B. C. 3rd century A. C., Nicholas, C. W., 1949, University of Ceylon Review Vol.VII, No.4,1949 , pp 235-248
6.6. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு – 2, பக்கம் 211 – 218, சென்னை: மீனா கோபால் பதிப்பகம்.
7.7. ப. சண்முகம் (2003) சங்கக்காலக் காசு இயல், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (பக்கம் 32-46)
  8.  தமிழ் விக்கிப்பீடியா, அகரமேறியமெய்முறைமை, நடனகாசிநாதன், ஐ,மகாதேவன், மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் கூறிய அகரமேறிய மெய் முறைமை குறிப்புகளை

தொகுத்து எழுதப்பட்ட கட்டுரை. (இணைப்பு: http://ta.wikipedia.org/wiki/அகரமேறிய_மெய்_முறைமை)

இந்த ஆய்வுக்கட்டுரை முடிந்தது இனி மீளாய்வுக்கும் புதிய ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டியவை என்ற தலைப்பின் கீழ் உள்ள ஒவ்வொரு பகுதியையும் தனிக் கட்டுரையாக ஆராயலாம். அசோகனுக்கு முன்னரே பிராகிருதப் பிராமியை பாண்டியர் எனக் கருதப்படும் அரசர்கள் உருவாக்கி விட்டார்கள் என மறுக்க முடியாத சான்று இதில் உள்ளதால் மதம் பிடித்த "வெள்ளை யானை" ஆய்வுத் தரப்பினற்கு இது மிகப்பெரிய அடி.


Friday, 9 August 2013

கூர்ங்கோட்டவர் என்றால் என்ன?

கூர்ங்கோட்டவர் என்பது நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருக்கும் 18 கதைகளின் தொடர் புதினத் தலைப்பு. இதில் கூர்ங்கோட்ட என்பது கூர்மையான தந்தங்களை உடைய யானை என்னும் பொருள்படும். அர் என்னும் விகுதி கூரிய தந்தங்களை உடைய யானையைக் கொண்டவர்கள் அல்லது யானைப்படையை கொண்டவர்கள் என்று பொருள் தரும். உலகின் முதற்குடியாம் தமிழ் குடி அதில் மிகவும் பண்டைய குடியாம் பாண்டியரிடத்தே மிகப்பெரியளவில் கரிப்படை இருந்தது. இந்த தொடர் புதினத்தின் 18 பாகங்களுமே 18 பாண்டிய மன்னர்களை கூற விளைபவை. அதனால் வள்ளுவர் காட்டிய சொல்லையும் (கூர்ங்கோட்ட ) என் கற்பனையின் விகுதியையும் சேர்த்து இந்த பெயரை உருவாக்கினேன். அவை பற்றிய விவரம் கீழே.

 1- 6. முதல் ஆறு பாகங்கள். இவை தொன்மங்களிலும் புராணக்கதைகளிலும் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட வரலாறுகளை உடைய பாண்டியர்கள் பற்றியது. இவற்றில் காணப்படும் அனைத்தும் வராலாற்று ஆதாரங்களுக்கு புறம்பானவை. ஆனால் கதை என்று வருமிடத்தில் இதில் பல கற்பனைகளை சேர்த்து பார்த்து நாம்  மகிழலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் "Mummy"  ''Lord of The Rings'' போன்ற கதைத் தண்மை கொண்டவை.

7 - 9 ஏழில் இருந்து ஒன்பதாவது பாகம் வரை இவை சங்க காலப் பாண்டியர்கள் பற்றியது. இவற்றில் வரும் ஒவ்வொரு தனித்தனி வாக்கியமும் வரலாற்று உண்மை. ஆனால் அடுத்துவரும் வாக்கியத்தை இணைத்துப் பார்த்தால் அவை என்னுடைய ஊகமாய் இருக்கும். உதாரணம் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இருந்தது உண்மை. உக்கிரப் பெருவழுதி என்னும் அரசன் இருந்ததும் உண்மை. ஆனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு பிறகு உக்கிரப் பெருவழுதி ஆண்டான் என்றால் அது என ஊகம்.

10 - 18 அடுத்த மூன்று மூன்று மூன்று கதைகளும் முறையே முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த 3 பாண்டியர்களையும், இரண்டாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த 3 பாண்டியர்களையும், தென்காசி பாண்டியர்கள் மூவரையும் பற்றியவை. இவற்றில் கூறப்படும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவையே.

இந்த 18 பாகங்களில் ஏழில் இருந்து 15ஆவது பாகம் வரை மூலக்கதையை நான் ஏற்கனவே தயார் செய்து வைத்தவை. மற்றவை எல்லாம் ஒரு வரிக்கதைகளாகவே தற்போது வரை இருக்கிறது. 7, 10-15 ஆகிய ஏழு கதைகளுமே ஈழத்தை பாண்டியர்கள் ஆண்டதைக் கொண்டு மையமாக வைத்து சித்தரிக்கப்பட்டவை.

கதை உருவாக்கத்தின் பின்னணி

நான் அடிப்படையில் இந்தியர் பற்றிய பண்டைய வரலாற்றையும் போர் முறைகளையும் திரைப்படங்களாக்கி இந்தியர் புகழை உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்ப வேண்டும் என்று என் சிறுவயதில் நினைத்தவன். அதற்கு வட இந்தியர் வரலாற்றை மட்டுமே வரலாற்று பாடங்களாய் அமைத்த தமிழ்நாடு அரசே காரணம். வீட்டில் திரைப்பட தொழில்நுட்பம் குறித்த பட்டயத்தை பத்தாவது முடித்தவுடன் படிக்க வேண்டும் என்று கூறியதும் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. அதனால் வழியில்லாமல் இயந்திரவியல் பட்டயம் படித்தேன். அதற்கும் கூட என் நண்பர் ஒருவர் இயந்திரவியல் பட்டயத்தில் நீ படிக்கும் மென்பொருள்கள் சில மாயா போன்ற திரைப்பட வரைகலை மென்பொருட்களின் அடிப்படையை கொண்டிருக்கும் எனக் கூறியதே. அதனால் நான் இயந்திரவியலை பட்டயமாக கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழக தொழிலிடை பல்தொழில்நுட்ப கல்லூரியில் படித்தேன். DME Sandwich in CIT sandwich polytechnic college

அப்படிப்பை நிறைவு செய்யும் வேளையில் எனக்கு "பொள்ளாச்சி பாலு" என்ற திரைப்படத் துறை மக்கள் தொடர்பாளரிடம் என் நண்பர்கள் பழக்கம் ஏற்படுத்தித் தந்தனர். அவரின் வேலை யாதெனில் ஒரு திரைப்படக் காட்சிக்கு அதிக மக்கள் கூட்டத்தை காட்ட வேண்டும் என்றால் அவரின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மக்களில் ஒரு கூட்டததை திரட்டிக் கொள்வர். ஆணாய் இருந்தால் ஒரு நாளுக்கு 100 ரூபாயும் பெண் என்றால் 150 ரூபாயும் அத்தொடர்பாளர் மூலம் காட்சியில் நின்றால் எங்களுக்கு கிடைக்கும். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி "காதலில் விழுந்தேன்", "கணபதி சில்க்ஸ்", "மலயாளப் படமான எஸ். எம். எஸ்.", "பாராசூட் விளம்பரம்" போன்ற விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடக்கும் படப்பிடிப்பு காட்சிகளுக்கு நேராகச் சென்று படம் எடுக்கும் முறை எப்படி என்றெல்லாம் பார்த்துக் கொண்டேன். அந்த மக்கள் தொடர்பாளரிடம் கேட்ட போது தான் எனக்கு போர் திரைப்படங்களை எல்லாம் எடுக்க 2020களில் 300 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிய வந்தது. நான் பட்டயம்  முடித்த பிறகும் கூட இந்திய வரலாறுகளை படிப்பதிலேயே என் ஓய்வு நேரத்தைச் செலுத்தினேன்.

பிற்பாடு இளநிலை இயந்திரப் பொறியியல் படிக்க காஞ்சிபுரத்தின் சங்கரா பல்கக்கலைக்கழகத்தில் (SCSVMV UNIVERSITY) சேர நேர்ந்தது. மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றின் காலக்கணிப்புகளை எல்லாம் அறிந்து கொள்ள தொன்மவியல் ஆய்வாளர் மகாலிங்கம் எழுதிய பண்டைய பாரதம் (Ancient India) படித்த போதுதான் குமரிக்கண்டம் பற்றித் தெரிய வந்தது. பாண்டியர் வரலாற்றின் மீது ஆர்வமும் எழுந்தது. அதனால் பாண்டியர் பற்றிய தொன்மக் குறிப்புகளில் இருந்து வரலாற்றுக் குறிப்புகள் வரையும் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன். அதுவரையிலும் என் சொந்த ஊராம் தென்காசியின் பெரிய கோயிலை கட்டியது பாண்டியன் என்று மட்டுமே தெரியுமே தவிர அவர்களுக்கு என்று அங்கு ஒரு சிற்றரசு மூன்று நூற்றாண்டுகள் இருந்தது என அறவே தெரியாது. அதை படித்ததில் இருந்தே எனக்கு மனதில் ஒரு நெருடல். மகாபாரதம், இராமாயணம் என வட இந்திய புராணக் கதைகளும் இதிகாசங்களும் தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்(ல்)வோர் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களில் எல்லாம் காட்ட படுகிறது. அதுவும் பல தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் ஒவ்வொரு இதிகாச புராணங்களையும் தமிழ் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்சிப்படுத்தினர்.

ஏன் என் பெற்றோரோ தமிழ் ஊடகங்களோ தொன்மத்தில் கூறப்படும் தமிழர் பற்றியும் சங்க இலக்கிய மன்னர்கள் பற்றியும் பிற்கால அரசர்கள் பற்றியும் தென்காசியை 3 நூற்றாண்டுகள் தலைநகரமாக கொண்டு ஆண்ட தென்காசிப் பாண்டியர்கள் பற்றியும் காட்சிப் படுத்தவோ சொல்லிக் கொடுக்கவோ இல்லை. இந்த அலட்சிய மனப்பான்மை ஏன் எனத் தெரிந்து கொள்ள மேலும் வரலாற்று நூல்களை படித்த போதுதான் தமிழர்களின் வரலாறு மட்டும் தொடர்ந்து மறைக்கப்படுவதுடன் அதைப் போற்ற வேண்டிய தமிழர்களே அதை நம்பாமலும் தாழ்வு மணப்பாங்கில் துவண்டு கிடக்கின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

அதற்கும் மேலாக இந்திய அரசே துணை நின்று நடத்திய ஈழத்தமிழர் படுகொலை, நீர் பங்கீட்டில் காட்டிய அலட்சியப் போக்கு, தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை, தமிழ் வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியலாளர்களும் கேளிக்கு உட்படுத்தப்பட்டமை இவை அனைத்தும் சேர்ந்து இந்திய வரலாற்றில் குவிந்து கிடந்த என் ஆர்வத்தை ஈழத்தமிழர் வரலாற்றிலும் தமிழர் வரலாற்றிலும் திருப்பின. அதில் இருந்து ஈழம், தமிழகம், தமிழ் மன்னர்கள் போன்றவை தொடர்பாக வந்த புதினங்கள், வரலாற்று தொல்லியல் இலக்கிய நூல்கள் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

தமிழர் வரலாற்றை மூலை முடுக்குகளிலும் கொண்டு செல்ல திரைப்படம் என்ற ஊடகத்தால் மட்டுமே முடியும். ஆனால் படித்தவர்களும் விவரம் தெரிந்தவர்களும் கூட தமிழர் வராலாற்றைக் கூறினால் அதை நம்பாமலும் கேளி பேசியும் வந்தனர். இவர்களைத் தடுப்பதற்கு இரண்டே வழிகள் தான். ஒன்று தமிழர் வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் முந்து அசோகப்பிராமி கொள்கை, கயவாகு காலம்காட்டி முறைமை, தமிழக தாழிகளின் காலத்தை வரலாற்றாளர்களும் தொல்லியலாளர்களும் கணிப்பதற்கு கையாண்ட முறைகள் அனைத்திலும் உள்ள புகுத்தப்பட்ட இடைவெளிகளையும் கோளாறுகளையும் தகர்க்க வரலாற்று நூல்கள் எழுதுதலும், அதை அனைவரும் அறிந்து கொள்ளும் படியான திரைப்படங்கள் இயக்குவதுமே.

தற்போதைய பொருளாதார சூழல்களில் போர் திரைப்படம் என்பது மிகச் சிரமமான காரியம். அதனால் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு ஒரு புதினம் எழுதிவிட்டால் அதை பின்வருபவர் எவராவது திரையில் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில் இந்த புதினங்களை எழுதத் தொடங்கியது. வரலாற்று ஆய்வும் இன்னொரு தளத்தில் சென்று கொண்டே தான் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் பீலியா

தமிழர் வரலாற்று புதினங்கள் என்றாலே சோழப் பேரரசர்களின் ஆதிக்கம் தான். பாண்டியர் சிங்களவரிடம் தன் மணிமுடியைக் கொடுத்ததால் அதை ஒரு சாக்காக வைத்தே பாண்டியர்களை தாழ்த்தி விட்டனர். அந்த மணிமுடியைக் கொடுத்த காரணமோ அரசியல் சூழ்நிலைகளோ வேறு எவர் சந்தித்து இருந்தாலும் அதையே செய்திருப்பார்கள். அது தவிர்த்து முதலாம் பாண்டியப் பேரரசை ஏற்படுத்தியவர்கள் மூவர் சிங்களத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் சிங்களம் கடல் கடந்து இருக்கும் நாடு. அதுவும் மணிமுடி ஒளித்து வைத்த இடமோ உருகுணை என்ற அடர்ந்த காடுகளைக் கொண்ட குறிஞ்சி முல்லை நிலம். அதனால் பாதுகாப்பு கருதியே இத்தகைய ஒரு செயலை பாண்டியன் செய்ய நேர்ந்தது. பாண்டியர்கள் சிங்களத்தை அடக்கி ஆண்ட வரலாற்றையும் புதினங்கள் தந்திருந்தால் இந்த பழிச்சொல்லுக்கு அவர்கள் ஆளாகி இருக்க மாட்டார்கள். வரலாற்று ஆய்வாளர்களுக்கு தெரியும் ஏன் பாண்டியன் தன் மணி முடியை அங்கு ஒளித்தான் என்று. ஆனால் அதை படிக்கும் வரலாறு மேல் அக்கறை இல்லாத சாதாரண மனிதர்கள் உணர்ச்சி வசப்பட்டு பாண்டியரை தவறாகவே எண்ணுவர்.

விதிவிலக்காக வந்த பாண்டியன் பவணி, கயல்விழி, இராஜமுத்திரை போன்ற பாண்டியர்களை மையப்படுத்திய புதினங்களும் மற்ற தமிழ் அரசர்களுடன் பாண்டியன் போரிட்டதையே சித்தரித்தன. கயல்விழி "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்ற படமான போதும் கூட பாண்டியர்க்கு கிடைக்க வேண்டிய புகழ் அனைத்தையும் இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த பதினெட்டு புதினங்களும் பாண்டியர் பற்றிய அனைத்து பெருமைகளையும் கொண்டிருப்பதுடன் பாண்டியரால் தமிழும் தமிழரும் பீடு நடை போட்டதை நிச்சயம் எடுத்துக் காட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
செருமாண் தென்னர் குலத்துக்கு 

தமிழ் வரலாற்று புதினங்கள் வாயிலாகவே ஒரு இழுக்கு நேருமாயின் அதை பார்த்துக்கொண்டு தென்பாண்டி நாட்டில் பிறந்த நான் புதினம் எழுதும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் தகுமா? அதனால் பாண்டியர் புகழ் பாடும் 9 புதினங்களுக்கான முன்னோட்டத்தை (Trailor) முகநூலில் விடப்போகிறேன். ஆர்வம் உள்ளவர் முகநூல் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும்.

https://www.facebook.com/Koorngotavar