தென் மதுரை முதல் தென்காசி வரை
Thursday 29 October 2020
Saturday 24 October 2020
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தமிழருக்கு எதிரானது
Friday 2 October 2020
சேந்தன் மாறன் காசு
ஈழத்தை விஜயனுக்கு முன்னரே ஆண்ட சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பற்றிய என் கட்டுரை அரண் பன்னாட்டுத்தமிழாய்வு மின்னதழில் சூலை வெளியீட்டில் வந்துள்ளது. இக்கருத்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழர்கள் ஆட்சி விஜயன் ஈழத்துக்கு வருவதற்கு முன்பே ஈழம் தமிழர் நிலமாக இருந்தது என்பதற்கு மேலும் நல்லதொரு சான்றாய் அமையும்.
இந்த வேந்தன் தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட ஒரு காசும் சிங்கள வரலாற்று ஆர்வலர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் எழுதியுள்ளது ராணா சிநதி நாமா (Rana Cinathi Nama) என்ற பாகத எழுத்துக்கள் என அவர் தவறாக படித்துள்ளார். நான் இதை சேந்தன் மாறன் என படிக்கிறேன். இந்த காசின் காலம் எனது கணிப்பில் கி.மு. ஏழாம் ஆறாம் நூற்றாண்டாகும்.
காசின் பின்புறம் கிளர் கெண்டை மீன் பொறிக்கப்பட்டுள்ளதாலும் காசில் உள்ள எழுத்துக்களில் தமிழுக்கு மட்டுமே ஊரிய எழுத்துக்களும் பாகதங்களில் இல்லாத எழுத்துக்களுமான றகரமும் னகரமும் உள்ளதாலும் மாறன் என்ற பெயர் சங்ககாலத்தில் பாண்டிய வேந்தருக்கே இருந்ததாலும் இதில் எழுதப்பட்டிருப்பது சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பெயரே என உறுதியாக கூற முடியும்.
மகாவம்சத்தில் சேந்தனின் போர்:
மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.
“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ” மகாவம்சம் 15:127-131
மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்:
மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை. அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம். மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து
மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து
மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்
இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்
- மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61
பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்:
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான். அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் சேந்தன் என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில் ஜயந்தவர்மன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும். வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும். தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று.
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன்
- வேள்விக்குடிச்செப்பேடு வரி 30
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி
- சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11
ஆகவே மகாவம்சத்தில் ஜயந்தன் என பாலியில் குறிக்கப்பட்ட அதே அரசனே காசில் காணப்படும் சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் என்பது எனது முடிவு. விஜயனுக்கு முன்னரே இந்த பாண்டியன் ஈழம் ஆண்டதால் ஈழம் தமிழரின் பூர்விக பூமி என்பது மேலும் தெளிவாகிறது.
Sunday 21 May 2017
சகரக் கிளவியும் சங்கமும்
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே கடையே
என்று மட்டும் தான் சொல்கிறது. அந்த பாடலை முழுதாக கீழுள்ளது போல் முழுதாக படித்தால் பொருள் புரியும்.
க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோரற்றே கடையே
என்பது தான் முழு பாடலாக இருந்திருக்க வேண்டும். இதன் பொருள் க, த, ந, ப, ம எழுத்துக்களின் வரிசையில் உள்ள 12 உயிர்மெய் எழுத்துக்களும் மொழி முதல் எழுத்து வரும் என்று முதல் இரு வரிப்பாடல்கள் சொல்கின்றன. மூன்றாவது வரியை எளிதாக புரிந்து கொள்வதற்காக கீழுள்ளது போல் பிரித்துத்தருகிறேன்.
சகரக்கிளவியும் - சகர வரிசை எழுத்துகள்
அவற்றோரற்றே - க, த, ந, ப, ம வரிசை எழுத்துக்கள் போல் அனைத்து உயிர் எழுத்துக்களோடும் கூடாமல்
கடையே - கடை எழுத்தான ஔ என்னும் உயிரெழுத்தோடு சேர்ந்து வராது.
இதை இப்போது சேர்த்து படித்து பொருள் கொள்வோம். க, த, ந, ப, ம வரிசை எழுத்துக்கள் 12 உயிரெழுத்துக்களோடு கூடி மொழி முதல் வரும். அதாவது க முதல் கௌ வரையும், த முதல் தௌ வரையும், ந முதல் நௌ வரையும், ப முதல் பௌ வரையும், ம முதல் மௌ வரையும் மொழி முதல் வரும்.
ஆனால் சகர வரிசை எழுத்துக்கள் க, த, ந, ப, ம போல் அனைத்து உயிரெழுத்துக்களோடும் கூடி வராமல் ஔ என்னும் கடையெழுத்து அற்று மற்ற 11 உயிரெழுத்துக்களோடும் கூடி வரும் என்பதே. அதாவது சங்கம், சாத்தன் .... சோலை என்பது எல்லாம் தமிழ் சொற்களே. சௌந்தர்ய, சௌகர்ய போன்ற சொற்கள் தமிழல்ல. அவற்றை தமிழில் எழுதும் போதும் சவுந்தரியம், சவுகரியம் என்று எழுத வேண்டும் என்பதே பொருள்.
ஆனால் ஊவேசாவோ
க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
என்று இல்லாதவற்றை சேர்த்து எழுதியிருக்க வேண்டும். கீழே நான் கொடுத்திருக்கும் ஓலைச்சுவடியில் "அ ஐ ஔ என்னும் மூன்றலங்" என்ற சொற்கள் இல்லவே இல்லை. மாறாக "சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே கடையே" என்று நேரடியாக சொல்லி விடுகிறது. ஆக "அ ஐ ஔ என்னும் மூன்றலங்" என்று ஓலைச்சுவடியில் இல்லாத சொற்களை உவேசா வலிந்து திணித்திருக்க வேண்டும்.
பாவாணர் சொன்ன தவறான வரிகள்:
பாவாணர் நான் சொன்ன கருத்தையே சொல்கிறார் என்றாலும் அவர் தரும் வரிகளும் தவறானவையே. அவர் உவேசா சொன்ன "அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே" என்னும் வரிகளுக்கு பதிலாக "அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே" என்று ஓலைச்சுவடிகளில் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானித்திருக்கிறார். ஆனால் ஓலைச்சுவடியில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று விதை முகநூல் பக்கத்தின் கார்த்திகேயன் மறுத்திருப்பதை பார்க்கவும். கார்த்திகேயன் சொல்வது யாதெனில் "அவை" என்பது பன்மை குறிக்கும் சொல்லாக உள்ளது என்பதும் ஆனால் அதற்கு பிறகு "ஔ" என்னும் ஒரே எழுத்து மட்டும் குறிப்பிடப்படுவதால் "அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே" என்று வந்திருக்காது என்கிறார். நான் இந்த ஒலைச்சுவடியை 2012ல் கண்டெடுத்தாலும் இதை இவ்வளவு நாள் வெளியிடாமல் இருந்தது இதை நூலாக வெளியிடும் போது சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்ததே ஆகும். ஆனால் சங்கம் என்ற சொல்லே தமிழ் அல்ல என்று தலித்தியத்தை சாக்கியவாதம் என்ற புனைப்பெயரில் பேசிவரும் கூட்டதை நம்பி ஏமாந்துவரும் தமிழர்களுக்கு உண்மையை சொல்லவேண்டும் என்பதே.
ஏற்கனவே ஊவேசா இருபிறப்பாளர் என்ற புலையரை குறிக்கும் சொல்லை இழிபிறப்பாளர் என்று மாற்றி படித்ததாகவும் இதன் மூலம் புலையர்கள் பார்ப்பனர்கள் (இருபிறப்பாளர்கள்) என்பதை மறைக்கவே ஊவேசா இழிபிறப்பாளர் என்று மாற்றி படித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. நானும் ஓலைச்சுவடியில் இல்லாத தடவு என்னும் சொல்லை வலியத்திணித்து வேளிர்களை குஜராத்தில் இருந்து வந்ததாக சித்தரிக்கவே உவேசா சித்தரிக்க முயன்றார் என்று ஓலைச்சுவடி ஆதாரத்தோடு நிரூபித்தும் உள்ளேன். வேளிர் தோன்றியது பொதிகை மலையிலேயே என்னும் கட்டுரை தொடரில் முதல் கட்டுரையில் அந்த ஒலைச்சுவடியையும் தந்துள்ளேன். இப்படி ஊவேசா தான் படிக்க இயலாத புரிந்து கொள்ள இயலாத ஓலைச்சுவடியில் தெளிவாக இல்லாத சொற்களுக்கெல்லாம் சங்கத புராணங்கள் அளந்துவிடும் கதைக்கு ஏற்ப ஓலைச்சுவடியில் இல்லாத சொற்களை சேர்த்து தமிழ் அறிவியல் விளக்கங்களை சங்கத புராண விளக்கங்களாக மாற்றி எழுதியுள்ளார் என்று தெரிகிறது. இதற்கு அவர் பிராமணிய சூழலில் பிறந்து வளர்ந்தது காரணமாக இருக்கலாம். இல்லை பிராமணர்களுக்கு தமிழ் மேல் இருந்த வெறுப்பும் காரணமாக இருக்கலாம். எது உண்மை என்பது உவேசா நேரே வந்து சொன்னால் தான் தெரியும். அதனால் படிப்பவர்கள் அனுமானத்திலேயே விட்டுவிடுகிறேன்.
________________
பாவாணர் தான் எழுதிய பண்டைத்தமிழகம் நூலில் இதுபற்றி கூறியதை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம். இதை துடிசைக்கிழார் நூலில் இருந்து தருகிறார்.
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=186&pno=143
________________
இனி மேல் சொன்னதை தொகுத்து கீழே தருகிறேன்.
ஊவேசாவின் வலியப்புகுத்தலும் தவறான வரிகளும். அடிக்கப்பட்ட சொற்கள் ஓலைச்சுவடியில் இல்லாதவை. ஆனால் ஊவேசா வலியத்திணித்தவை.
க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
துடிசைக்கிழார் சொன்ன பாவாணர் வழிமொழிந்த சரியான விளக்கமும் தவறான வரிகளும். அடிக்கப்பட்ட சொற்கள் ஓலைச்சுவடியில் இல்லாதவை.
க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
நான் கூறும் சரியான வரிகளும் சரியான விளக்கமும்.
க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோரற்றே கடையே - தென்காசி சுப்பிரமணியன்
Tuesday 13 October 2015
அது என்னாங்கடா திராவிடப் பிராமி?
அது என்னப்பா சிங்களப் பிராமி.?!
தமிழியை அசோகப் பிராமியில் இருந்து இரவல் வாங்கிய எழுத்துமுறை என்று பலானக் கட்டுரைகளை எழுதிய இவனை எதிர்க்க தமிழகத் தொல்லியல் துறையில் எவருக்கும் வக்கு இல்லை. (இதுவரைக்கும்) பாகத எழுத்துக்களையே முதலில் அசோகன் கண்டுபிடிக்காத போது பாகத எழுத்துமுறைக்கு அசோகப்பிராமி என பெயர் வைத்தார்கள். தமிழகத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் மண்ணடுக்கில் இரண்டு பானையோட்டுப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட அதில் தமிழிக்கே ஊரிய ழ, ள, ற, ன இல்லாததால் அது தமிழி இல்லை பாகதம் எனச் சொன்னார்கள். அது அவர்கள் சொல்லும் படி பாகதம் எனவே வைத்துக்கொள்வோம். அவர்கள் சொல்கிறபடிப் பார்த்தாலும் கூட தமிழகத்தில் கிடைத்த பாகத எழுத்துக்கள் அசோகனின் காலத்துக்கு இரண்டு நூற்றாண்டுகள் முந்தியது. எனில் இன்னும் பாகத எழுத்துமுறைக்கு அசோகப்பிராமி என பெயர் வைப்பானேன்?
இங்கு தான் இருக்கு வெள்ளை யானை பெத்தவாட்டின் தில்லு முல்லு. இது தவிர ஈழத்தில் உள்ள பாகத எழுத்து முறையோ கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முந்தையது. அது ஈழத்தில் இருந்த உருகுணை பாண்டிய அரச மரபினால் எழுதப்பட்டது. எனில் தமிழ் பிராமிக்கு தமிழி என்றும் சிங்களப் பிராமிக்கும் பாகத பிராமிக்கும் பாண்டியரை நினைவுக்கூறும் பெயரை இடுவதுமே தகும். ஏற்கனவே உருகுணை பாண்டிய அரச மரபினர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் ஈலு என்னும் தமிழ் வழக்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக காலக் கணிப்புடன் என் ஆய்வுக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.
உருகுணைப் பாண்டியர்கள்
ஆனால் இனி காலம் மாறும். மாற்றுவோம். அடுத்து வரும் தலைமுறையினர்.
Monday 12 October 2015
கொரியாவின் காயா அரசை தோற்றுவித்த தமிழ் இளவரசி
இது தொடர்பான என் ஆய்வுக்கட்டுரை நவம்பர் 6 2015 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வரங்கில் வெளியாகாவிட்டால் முகநூலில் கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வெளியிடப்படும்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/46/%E0%A4%85%E0%A4%B5%E0%A4%A7_%E0%A4%AE%E0%A5%8B%E0%A4%B9%E0%A4%B0.jpg
டைம்சு ஆஃப் இந்தியாவில் உத்திர பிரதேச மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டில் தான் வந்தது எனக் காட்டும் கட்டுரை இணைப்பு கீழே.
http://timesofindia.indiatimes.com/city/lucknow/The-emblem-story/articleshow/201009.cms
Friday 26 December 2014
வேளிர் தோன்றியது பொதிகை மலையிலேயே. - 1
இது பாண்டியர் வரலாறு பற்றிய வர்லாறு மட்டும் கூறும் தளமாக இருந்தாலும் வேளிரை விளக்காமல் பாண்டியர் தோற்றம் பற்றி விவரிக்க முடியாது என்பதால் இப்பதிவும் இங்கு இடம்பெறுகிறது. அடுத்த பதிவில் வேளிரின் மூலம் பற்றிப் பார்க்கலாம்.