Showing posts with label வேண்டுகோள்கள். Show all posts
Showing posts with label வேண்டுகோள்கள். Show all posts

Saturday, 24 October 2020

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தமிழருக்கு எதிரானது




ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழருக்கு எதிரானது. பதிமூன்றாம் நூற்றாண்டு சோழநாட்டை ஆண்டது சோழரே அல்ல. பிறமொழி சாளுக்கியர்கள்.
தமிழ்ச்சோழரான விஜயாலயன் தமிழ் வேளிரான இருங்கோவேள் மரபில் வந்த கொங்குச்சோழர் அபிமானன் கொங்கு நாட்டில் இருக்க பிறமொழி சாளுக்கியரான குலோத்துங்கன் சோணாட்டு அரியணை ஏறியதே தமிழர் மரபுக்கு எதிரானது. குலோத்துங்கன் தமிழ்ச்சோழரான அதிராஜேந்திரச்சோழனை கொன்றுவிட்டு சோணாட்டு அரியணை ஏறியதாக சொல்லும் சாளுக்கியர் நூல் குறித்தும் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.

கிபி 1069ல் உருவாக்கப்பட்ட சைவ வைணவ கலவரம் வலங்கை இடங்கை கலவரம் யாரால் மூட்டப்பட்டது என்பதையும் காணொளியில் கூறியுள்ளேன்.
ஈழம் வரலாற்றடிப்படையில் சோழர் அரசாங்கம் கீழ் இருந்ததை விட பாண்டியர் கீழ் தான் அதிகம் இருந்துள்ளது.

ஆனால் திரைப்படத்தில் சாளுக்கியர்கள் ஈழத்தமிழர் போலவும் பாண்டியர்கள் தற்கால சிங்களப்படை போல பெண்களை வன்புணர்ந்ததாகவும் காட்டியுள்ளார் செல்வராகவன்.
எனில் பாண்டியர்களுக்கு எதிரான வன்மத்தையே ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் செல்வராகவன் விதைத்துள்ளார். செல்வராகவனின் தாத்தா பெயர் ராம்சாமி நாயுடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல தகவல்கள் பாண்டியர்கள் பற்றி இந்த காணொளியில் உள்ளன. - தென்காசி சுப்பிரமணியன் ( Sundaram Muthiah Rajasubramanian )
https://youtu.be/J6dXL377XXA

Thursday, 4 July 2013

பேரரசர் அசோகர்? பேரரசர் அக்பர்? எனில்

நமது பாடத்திட்டம் அசோகன், பாபர், அலெக்சாண்டர் போன்ற நிலத்தின் வழி நாடு பிடித்தவர்களை பேரரசன் என்னும் பட்டதுடன் அழைக்கின்றன.

Alexander The Great,
Babar The Great,
Akbar The Great etc etc

எனில் கடலின் வழி கடற்படையோடு நாடு பிடித்த குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன், இராசராச சோழன், இராசேந்திரச் சோழன் இவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள். தமிழக அரசு இனியாவது விழிப்படைய வேண்டும்.

Wednesday, 19 June 2013

சீனத்துக்கு பாண்டியன் தூது

தமிழர் வரலாற்றில் ஆர்வமுடையோர் பலருக்கு சோழர்கள் சீன நாட்டிற்கு தூதனுப்பியதை நன்கு தெரிந்திருக்கலாம். நான் படித்த முக்கிய வரலாற்று ஆர்வலர்கள் எழுதிய ஆய்வு நூல்களில் இதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஒருவேளை படிப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தால் விக்கிப்பிடியாவில் சில நூல்களில் இருந்து தொக்குத்து எடுத்த தகவல்களை பின்வரும் இணைப்பில் எழுதியிருக்கிறேன். பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

http://ta.wikipedia.org/s/1yx - சோழர்களின் சீனத் தொடர்பு

ஆனால் பாண்டியர் வரலாறு பற்றி தனியாக எழுதப்பட்ட நூல்களில் கூட பாண்டியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் ஏறக்குறைய 5 முறை தூதுக்குழுக்கள் வந்துள்ளதை எழுதவில்லை.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

http://ta.wikipedia.org/s/cks

இவனைப் பற்றிய ஓரளவு குறிப்புகளை மேற்கொடுத்த விக்கிப்பீடியாவின் இணைப்பு வழி அறியலாம்.  இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாடு (அப்போதைய பாண்டிய நாடு என்பது மூவேந்தர் அரசுகள், வட இலங்கை, தெற்கு கர்நாடகம், ஆந்திரம் வரை பரவியிருந்தது அறியப்பட்ட வரலாறு. இவனது சித்தப்பனான வீர பாண்டியன் சுந்தர பாண்டியன் ஆணையின் பேரில் ஜாவா, காடாரம், சீனாவில் சில பகுதிகள், தாய்லாந்து போன்றவற்றை வென்றான் அன்பது அறியப்படாத ஆவணப்படுத்த வேண்டிய வரலாறு.கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை இருந்த இவனது ஆட்சியில் தமிழகம் உலகு எங்கிலும் காணாத ளவுக்கு சீரும் சிறப்பும் பெற்றிருந்ததாக மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டுப் பயனிகள் கூட குறித்துள்ளனர். ஆனால் இதைப் பற்றி எவரும் வரலாற்று நூலில் பெரிதாக கூறவில்லை.

மேலும் இவன் சார்பில் ஜமாலுதீன் என்ற அமைச்சரின் கீழே ஒரு தூதுக் குழு கி.பி.1280ல் சீனாவி
ல் உள்ள ஒரு மன்னனை சந்தித்தது. ஏதோ ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். 

அதையேற்ற அம்மன்னன் யாங்திங் பீ என்ற தன் அவையில் இருந்து ஒரு தூதுவரை அனுப்பி வைத்தான்.  யாங்திங் பீ   கி.பி.1282ல்  பாண்டிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் குறிப்புகள் ஏதும் உள்ளனவா?

பின் 1283ல் பாண்டி நாட்டில் இருந்து ஒரு குழுவும் 

சீனத்தில் இருந்து ஒரு பதில் குழுவும் 

பிற்பாடு பாண்டிய நாட்டில் இருந்து ஒரு குழு 1984ல் சென்றது வரை குறிப்புகள் உண்டு.

ஆனால் இதன் குறிப்புகள் ஏன் அதிக வரலாற்று நூல்களில் சொல்லப் படவில்லை.

ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக 

மேலுள்ளது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஜாவக நாட்டை வென்ற கல்வெட்டு - இந்தோனேசிய சாவக சுமத்ரா தாய்லாந்து பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் இது உள்ளது. கா. அப்பாத்துரையார் எழுதிய நூல் மட்டும் இதைக் குறிப்பிடுகிறது. ஆனல் இக்கல்வெட்டு எங்குள்ளது என இன்னும் தெரியவில்லை. பாண்டியர் மெய்கீர்த்திகளில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும், முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் கீழ் அவனது தம்பி வீர பாண்டியனும் சீனம், காடாரத்தை வென்றதாக குறிப்புகளுண்டு. ஆனால் இதை தமிழர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

Monday, 15 April 2013

அது என்னப்பா சிங்களப் பிராமி.?!

தமிழர்கள் தமிழை எழுதப் பயன்படுத்திய வடிவங்களில் பிராமியும் ஒன்று. அதனால் அது தமிழ் பிராமி.

அசோகன் தன் கல்வெட்டில் பிராமி வரிவடிவத்தை வைத்து தன் ஆணையை எழுதினான். அதனால் அது அசோகப் பிராமி.

வட இந்தியாவில் காணப்படுபவை எல்லாம் சேர்த்து வட பிராமி.

தென் இந்தியாவில் காணப்படுபவை எல்லாம் சேர்த்து தென் பிராமி.

இதெல்லாம் சரி. அது என்னப்பா சிங்களப் பிராமி. சிங்களத்தை பிராமி கொண்டு எழுதினாரா? இல்லை சிங்களவர் முதலில் இலங்கையில் பிராமி கல்வெட்டுகளை பொறித்தனரா?

சிங்கள அரசர்கள் என்று கருதப்படுபவர்களை கூட பிராகிருத மொழியில் தான் பிராமி கல்வெட்டுகள் குறிக்கின்றன. இது போதாது என்று "ஆனைக்கோட்டை முத்திரை" வேறு தமிழிலேயே பொறிக்கப்பட்டுளது.  மேலும் பண்டு காபயன் காலத்தில் உருகுணையை ஆண்ட பாண்டியர்கள் தான் கல்வெட்டுகளில் கூறப்படும் முதல் இலங்கையின் மன்னர்கள் ஆவார்கள். (எனக்குத் தெரிந்து.)

1. ஈழத்தின் முற்காலக் கல்வெட்டின் மொழியும் சிஙகளம் இல்லை.
2. ஈழத்தின் முற்கால முத்திரையின் மொழியும் சிங்களம் இல்லை.
3. ஈழத்தின் முற்காலக் கல்வெட்டுகளை முதலில்  பொறித்த அரசர்களும் சிங்களவர் இல்லை.
4. சிங்கள அரசர்களை குறிப்பிடும் முற்காலக் கல்வெட்டுகளும் பிராகிருத மொழியே அன்றி சிங்களம் இல்லை.


பின்னர் என்ன .....  சிங்களப் பிராமி?

இதை இப்படியே விட்டால் சிங்களப்பிராமியில் பிராமி உள்ளது. அதனால் இந்தியா முழுவதும் மொழி ஏற்பட சிங்களமே காரணம். அதனால் சிங்களவர் இந்தியர்களுக்கு எல்லாம் தாய். அதனால் இந்தியா சிங்களவரை ஆதரித்தே தீர வேண்டும் என்று சிங்கள பேரினவாதிகளும் தூதுவர்களும் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி விடப்போகிறார்கள் ஜாக்கிரதை.

Saturday, 18 August 2012

பெருங்கற்கால கிராமமா தென்காசி? -1

குத்துக்கல் வலசை கல்லை நான் இயற்கையாய் எடுத்துக் கொள்ளாததன் காரணங்கள்,


1. இந்த அடிபாகம் கல்லை விழுந்து விடக்கூடாது என்று மனிதர்கள் ஏற்படுத்தியது போன்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த அடிப்பாகத்தை போல் வேறு சில இயற்கைக் குத்துக்கற்கள் பொருந்துவதாய் இல்லை.
2. மேலும் இதன் மேல்பாகம் இன்னும் ஐயம் ஊட்டுவதாய் உள்ளது. பார்பவர்கள் யாருக்காவது இதன் மேல் பாகத்தின் உருவத்தைக் கணிக்க முடிந்தால் சொல்லவும். ஆனால் இன்னும் நான் மேல் சென்று பார்க்கவில்லை என்பதால் இதை பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை.
3. அடுத்தது இந்த இடம் பெயர் குத்துக்கல் "வலசை" என்பதே. வலசை என்பது வரிசையை குறிக்கும். இன்றும் வலசை போதல் என்ற சொல் கிராமப்புறங்களில் உண்டு. அதற்கேத்தார் போல் இந்த சுற்று வட்டார மக்களும் முன் காலத்தில் இதன் தொடர்சியாக மேலும் 4,5 கற்கள் இருந்ததாக கூறுகின்றனர்.

4. அடுத்தது இதை இந்த மக்கள் வழிபட்டதாகவும், அங்குள்ள மக்களும்.
5. அடுத்தது கல், சின்னம், உருவம் என்று தெய்வ வழிபாட்டின் படிம வளர்ச்சியை இங்கு காணும் சான்றுகள் மறைமுகமாக தெரிவிப்பதாகத் தெரிகிறது. தற்போது இந்த கல்லை விட்டு அங்குள்ள வேறொரு தெய்வத்தை வணங்கியதாக அவர்கள் கூறுவது இதற்கு மேலும் சான்று.

இப்போதைக்கு இதன் அடிப்பாகம் இயற்கையானதா என்பது பற்றிய மாற்றுக்கருத்துக்களை பகிரவும். இதன் வழிபாட்டு முறை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன். கற்கால ஆராய்ச்சியாளர் எவராவது வந்து இதை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்.

பெருங்கற்கால கிராமமா தென்காசி ?

எனக்கு தென்காசியில் ஒரு இடத்தைக் கண்டு நெடுநாட்களாக ஒரு ஐயம் உண்டு. அதை நீங்கள் "சூலம்" என்ற தொடரில் கண்டிருக்கலாம். நான் அது என்ன இடம் என்று இறுதியில் படத்தோடு இணைத்துள்ளேன்.
அதைப் பார்ப்பதற்கு முன் பெருங்கற்கால செண்பகப்பொழிலுக்கு (தென்காசி) சென்று வருவோம்.

செண்பகப்பொழிலில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த சம்பத் மற்றும் செந்தில் செல்வக்குமாரன் போன்ற ஆய்வாளர்கள் அழுதகன்னி ஆற்றை 1980களில் ஆய்ந்ததில், இந்த ஆற்றுப்படுகையில் இடைக்கற்கால ஆயுதங்கள் மற்றும் பெருங்கற்கால நில அடையாளக் கற்குவைகளும் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இது தவிர்த்து ஆயிரப்பேரி என்ற இடத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்கால பானைகள் இன்று குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்துள் (http://www.tnarch.gov.in/sitemus/mus10.htm) வைக்கப்பட்டுளது. இடைக்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் மூன்றும் வரிசையாக வருவன. இம்மூன்று காலப் பொருட்களும் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றதால் இங்கும் தங்கள் நிலையான குடியிருப்புக்களை மக்கள் தொடர்ந்து அமைத்துக் கொண்டது தெரிகிறது.

நான் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதனருகில் பானை செய்யும் குயவர்கள் இருந்தார்கள். அவர்களின் வீடமைப்பு முறை சாய்வான நிலங்களில் ஊட்டியில் உள்ளது போல் அமைத்திருந்தனர். இப்போது அந்த இடமே மாறிவிட்டது. எனக்கென்னவோ இவர்களிடம் பெருங்கற்காலத் தன்மை ஒட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகிரது.

ஐயத்துக்கு உட்பட்ட இடம்


இந்த இடம் பெயர் குத்துக்கல் வலசை. இந்த கல்லை ஒருகாலத்தில் வழிபட்டதாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். கேட்டால் இயற்கையாக உருவானதாக கூருகிறார்கள்.