அப்பாத்துரையார் தான் எழுதியதென்னாட்டுப் போர்க்களங்கள் நூலில் பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
//ஜய நகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது. //
அதாவது நமது தமிழக பாண்டியர்கள் அங்கே ஆண்டார்கள் என்பது போல் இருக்கும் அவர் வாதம்.
ஆனால் இந்த கல்வெட்டு செய்தி கூறும் மன்னர் மரபு தமிழகத்தை ஆண்ட பாண்டியர் மரபல்ல என்பது ஒரிசா பாலு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நான் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன். மேலும் இக்கல்வெட்டு கூறும் மன்னன் யாரென ஆராயுங்கால் அது சாவக நாட்டின் மச்சபாகீத பேரரசின் ஜெயநேகரன் (1309 - 1328என்பது தெரிய வரும்.
இவனுக்கு பின்வரும் மூன்று பெயர்கள் உண்டு.
1. ஜெயநேகரன்
2. ஸ்ரீ மகாராஜ வீரலந்தகோபால ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவாதீசுவரன்
3. காலஜெமெத்
அப்பாத்துரையார் குறித்த சுந்தர பாண்டிய என்னும் கல்வெட்டு இச்சாவக மன்னனையே குறிக்கிறதே அன்றி தமிழக பாண்டியர்களை குறிப்பதல்ல.
நிற்க
மச்சபாகீத பேரரசின் முதலாவது மன்னன் தன் கல்வெட்டுகளில் பாண்டியன் என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை. மீன் சின்னத்தையும் ஏற்றவில்லை. ஆனால் இந்த இரண்டாம் மன்னன் மட்டும் ஏன் சுந்தர பாண்டியன் என்ற ஒட்டுப் பெயரையும் மீன் சின்னத்தையும் தன் கல்வெட்டுகளில் பொறித்தான் என அலசிய போதுதான் பாண்டியர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கூறும் செய்திகள் பலவற்றின் பொருள் பொதிந்த உண்மையை நான் அனுமானித்தேன்.
வரலாறு விரியும்.

நல்ல ஆராய்ச்சி, தேடல்! வாழ்த்துகள்!
ReplyDeleteவரலாறு விரியும் என்று சொல்லிவிட்டு, உண்மையை ...
ReplyDelete"மச்சபாகீத பேரரசின் முதலாவது மன்னன் தன் கல்வெட்டுகளில் பாண்டியன் என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை. மீன் சின்னத்தையும் ஏற்றவில்லை. ஆனால் இந்த இரண்டாம் மன்னன் மட்டும் ஏன் சுந்தர பாண்டியன் என்ற ஒட்டுப் பெயரையும் மீன் சின்னத்தையும் தன் கல்வெட்டுகளில் பொறித்தான் என அலசிய போதுதான் பாண்டியர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கூறும் செய்திகள் பலவற்றின் பொருள் பொதிந்த உண்மையை நான் அனுமானித்தேன்.
இந்த உண்மையை குறித்து விரிவாக விளக்கலாகும்.