எனக்கு நீண்ட நாளாக இருந்த ஐயம் எரித்திரயக் கடல் பெரிப்ளசில் குறிப்பிடப்படும் ஆர்கெய்ரு பாண்டியனின் அழகன்குளமா? அல்லது சோழனின் உறையூரா? என்று. அது தொடர்பாக கடலியல் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் நடந்த உரையாடல்கள் சில.
//நமது பாக் வளைக்குடா முழுவதும் கடல் பட்டு சிப்பிகளில் இருந்து எடுக்கப்பட்டது - Orissa Balu//
மேற்கத்தியர் எழுதிய குறிப்புகளில் காணப்படும் ஆர்கெய்ரு பாண்டிய நாட்டு அழகன்குளம் என்பது இக்கருத்து மூலம் உறுதி ஆகிறது. சிப்பி முதுது இவை எல்லாம் பாண்டிய நாட்டில் தான் அதிகம் கிடைக்கும். ஆர்கெய்ருவில் பட்டுத்துணியில் முத்தைத் தைத்ததாக குறிப்புண்டு.
//pearl-fisheries are; (they are worked by condemned criminals); and it belongs to the Pandian Kingdom. Beyond Colchi there follows another district called the Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic. - Periplus of the Erythrean Sea - Para 59//
மசுலின் பிற்காலத்தில் வழக்கில் வந்த துணியாகத் தான் தெரிகிறது. எரித்திரியக் கடல் குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது அவர்களுக்கு கடற்பட்டின் ஆங்கில பெயர் தெரியாதலால் மசுலின் என குறிப்பிட்டு இருப்பார்களோ என நான் ஐயுருகிறேன்.
எரித்திரியக் கடல் குறிப்புகள் குறிப்பிடும் ஆர்கெய்ரு சோழரின் உறையூரா அல்லது பாண்டியரின் அழகன்குளமா என்பது தொடர்பாக எனக்கும் கடலோடி நரசையா அவர்களுக்கும் நடந்த உரையாடல் கீழே.
((அழகன்குளத்தை அர்கெய்ரு என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதைப் பாருங்கள்:
59. From Comari toward the south this region extends to Colchi, where the pearl-fisheries are; (they are worked by condemned criminals); and it belongs to the Pandian Kingdom. Beyond Colchi there follows another district called the Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic.
இது செங்கடல் வழிகாட்டியின் 59 வது பத்தி. இங்கு ஆர்கரு உள் நாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசீலிக்கவும்.
நான் திருசிரபுரம் என்ற நூல் எழுதிக்கொண்டிருக்கின்றேன் அதில் இப்பத்தியை இவ்வாறு மொழிபெயர்த்துள்ளேன்:
செங்கடல் வழிகாட்டி உறையூரைச் சுட்டிக்காட்டுகிறது: ஆற்றின் வழியில் அமைந்துள்ளதாகக் கூறுகிறது. செங்கடல் வழிகாட்டியின் 59 வது பாராவில் உறையூர் குறிப்பிடப்பட்டுள்ளது. “. . கொல்சிக்கு அப்பால் கடற்கரை நாடு (சோழநாடு) இருக்கிறது. அந்த மாவட்டம் ஒரு விரிகுடாவின் ஓரத்தில் உள்ளது. உள்நாட்டில் அர்கரு(உறையூர்) என்னும் இடம் ஒன்று இருக்கிறது. கடலில் எடுக்கப்பட்ட முத்துகளெல்லாம் அவ்வூரில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. முத்தைத் தவிர அங்கிருந்து மஸ்லின் துணியும் ஏற்றுமதியாகிறது. அந்த்த்துணிக்கு அர்கரிட்டிக் என்பது பெயர்.”
கோழியூர், உறந்தை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் இது. கற்றவர்கள் இதைப் பற்றிய விவரம் தெரிந்திருந்தால் எழுதவும் - Narasiah.))
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
((இந்த ஐயம எனக்கும் வந்தது. விக்கிப்பிடியாவிலுள்ள செங்கடல் படthதிலும் நீங்கள் கூறியது போல் உறையூர் என்று தான் உள்ளது. ஆனால்
\\A famous ancient port town at Alagankulam is situated about 3 kms from the shoreline on the
இதே தகவல்கள் வைகை ஆறு, "தென் பாண்டி நாடு அடுத்த பாண்டிநாடு" என்பதற்கும் பொருந்தும். (கொற்கை அடுத்து மதுரை) வைகை கடலில் கடக்கும் இடமும் வரிகுடா (Orgalic Gulf,) போன்று தான் இருக்கும். தென் பாண்டி நாடு என்பது பாண்டி நாட்டின் அகநாடு. மேலும் பாண்டி நாடு தான் முத்து வணிக புகழ்பெற்றது. சோழ நாடல்ல. மேலும் ஒரு உதாரணமாக கடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. அழகன்குளமும் அப்படியே.
bank of river Vaigai. Presently, a channel which is about two km from ancient site is joining with
sea which could have been near to the site in bygone age must have been used for plying the boats.
No literary references have been noticed about this town either in Sangam literature or in foreign
notices (Kasinathan, 1992). There is a word Argeirou (McCrindle, 1885) mentioned in Geography
of Ptolemy, which could be identify with this place. It is said that this town is located around
Orgalic Gulf, which is suggested to be of Rameswaram area (McCrindle, 1885). The word Argalou
of Periplus of Erythrean Sea (McCrindle, 1887) also suggest the very location of Alagankulam. It is
said that it is lying inland and celebrated for a manufacture of muslin adorned with small pearls.\\ என்று
Riches of Indian Archaeological and Cultural Studies - Onshore and Near Shore Explorations along the Southern
Tamilnadu Coast: with a View to Locating Ancient Ports and Submerged Sites - DR. A.S. GAUR AND DR. SUNDARESH உள்ளது.
நீங்கள் கூறிய
//கொல்சிக்கு அப்பால் கடற்கரை நாடு (சோழநாடு) இருக்கிறது. அந்த மாவட்டம் ஒரு விரிகுடாவின் ஓரத்தில் உள்ளது.//
விக்கிப்பிடியாவில் நீங்கள் கூறிய தகவலும் பழைய நூல்களிலும் எடுத்தாலப்பட்டவை. அனால் நான் மேற்குறிய மேற்கோள் (Kasinathan, 1997) என்ற ஒரு நூலை எடுத்தால்வதால் அது ௨௦௦௦ த்துக்கும் மேல் எழுதப்பட்டவை என்பது உறுதி.
Reference Books
Kasinathan, N. 1992. Alagankulam-A Preliminary Report. Madras: State Department of Archaeology.
Kasinathan, N. 1997. Antiquity of Sea Voyage in Tamilnadu. Paper presented in First International
Conference on Marine Archaeology of Indian Ocean Countries, held at Chennai on 21-22 February,
McCrindle, J.W. 1885. Ancient India as Described by Ptolemy. Reprinted in 1985, New Delhi: Todays &
Tomorrow's Printers and Publishers.
McCrindle, J.W. 1879. The Commerce & Navigation at the Periplus of Erythrean Sea. Reprinted in 1987.
Patna.
இதை எல்லாம் வைத்துதான் அழகன்குளம் (Argairu) என்றூ உறுதியாக நம்பினேன். அனாலும் நீங்கள் கூறியது பழைய நூல் என்பதால் ஒதுக்கி விடுவதற்கில்லை. நான் இரண்டையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறு செய்து விட்டேன். - தென்காசி சுப்பிரமணியன்))
கேள்விகள்
ஆக அழகன்குளம் தான் ஆர்கெய்ருவா அல்லது உறையூர் தான் ஆர்கெய்ருவா? என்றறிய பின் வரும் வினாக்களுக்கு விடை வேண்டும்.
1. எரித்திரியக் கடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் கூறப்படும் மசுலின் என்பதற்கு இணையான மூல நூலில் உள்ள சொல் எது?
2. Argaritic என்பது தான் கடற்பட்டா?
3. எனில் அர்க்கரிட்டிக் என்ற சொல்லிற்கு இணையான வேறொரு தமிழ் சொல்லில் கடற்பட்டு அழைக்கப்பட்டதா?
4. ஆர்கெய்ரு எனக் குறிக்கப்படுவது பாண்டியரின் அழகன்குளமா? அல்லது சோழரின் உறையூரா? இந்த கேள்விகளுக்கு மற்றவர்களின் கருத்தென்ன?
இதைப் பற்றிய நூல் எழுதிய முந்தைய கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இரு தரப்பிலும் நிற்கிறார்கள்.
இதைப் பற்றிய நூல் எழுதிய முந்தைய கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இரு தரப்பிலும் நிற்கிறார்கள்.
No comments:
Post a Comment