Wednesday, 1 May 2013

மருங்கூருக்கும் புகாருக்கும் பெருந்துறை எங்கே?

குறிப்பு:இதைப் படிக்க எண்ணுபவர்கள் முதலில் நான் விக்கியில் தொகுத்த பெருந்துறைமுகம் , முன்துறைமுகம் என்ற இரு கட்டுரையையும் பார்த்து விடுங்கள். பின்பு இதைப் படித்த பின் வாதத்துக்கு வரலாம்.

http://ta.wikipedia.org/s/2r6e - பெருந்துறைமுகம்
http://ta.wikipedia.org/s/2r6c -  முன்துறைமுகம்

மேற்குறித்த இரண்டு கட்டுரையிலும் உள்ள தொகுப்புக்களை நோக்கின் முன்துறை என்ற சொல் கூறப்பட்ட அளவுக்கு பெருந்துறை கூறப்படவில்லை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. அதை கட்டுரையின் இறுதியில் நோக்கலாம். அதற்குமுன் இரு பூம்பட்டினங்கள் என்ன என என்று கண்டு விடுவோம்.

1. ஒன்று  அனைவரும் அறிந்த காவிரிப்பூம்பட்டினம்.
2.  இன்னொன்று சில தமிழார்வலர்களால்  பெயர் சூட்டப்பட்ட வையைப்பூம்பட்டினம். அதாவது மருங்கூர்.

இந்த 2 பட்டினங்களுக்கும் முன்துறை கூறப்பட்டதே அன்றி பெருந்துறை கூறப்படவில்லை. ஆய்ந்து நோக்கின் இப்பெருந்துறைகள் காலப்போக்கில் வேறு ஒரு பெயரில் அழைக்கப்பட்டு புகழடைந்து விட்டதே காரணமாகும் அப்படி நோக்கினால் காவிரிப்பூம்பட்டினத்துக்கும் வையைப்பூம்பட்டினத்துக்கும் முறையே பின்வரும் பெருந்துறைகள் இருந்தன  எனக்கொள்ள முடியும்.

1. மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் புகார் முந்துறைக்கு பெருந்துறைகளாக அமைந்தன.

2. அதைப்போல் வையைப்பூம்பட்டினத்துக்கு ஊணூர் பெருந்துறையாக அமைந்தது.

சங்க இலக்கியச்சான்று 
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே.

மேலுள்ள புறத்தின் 349ஆவது பாடல் ஊணூர் தான் வையைப்பூம்பட்டினத்துக்கு பெருந்துறையாக அமைந்தது என்பதை தெளிவுறக்காட்டுகிறது.

ஆய்வறிஞர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுங்கால் இதை நினைவில் கொண்டு கடற்கரையின் முந்துறையை மட்டும் ஆயாமல் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையையும் ஆய்வார்கள் எனில் எளிதில் அதிகளவு தொல்லியற்சான்றுகளை வெளிக்கொணர முடியும் என்பது என் முடிவு.

ஏனெனில் பெருந்துறையிலேயே அதிகளவு ஒப்பநத்தங்களும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment