Friday 23 May 2014

அது என்னப்பா அசோகப் பிராமி?

முதல் அசோகப்பிராமி என்பதே தவறான சொலவடை. அசோகன் கல்வெட்டில் உள்ள பிராகிருத மொழிகளின் ஒன்றில் எழுதப்பட்ட வரிவடிவம் அசோகனுக்கு 2 தலைமுறைக்கு முன்னரே இலங்கையில் மச்சமாராசனால் பதிக்கப்பட்டுவிட்டது. அசோகன் காலத்திலேயே பௌத்தம் ஈழம் சென்றதால் அவனுக்கு இரண்டு தலைமுறை முன் கூறப்படும் ஈழத்து மச்சராசன் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சங்கம் சமணருடையதாக்வே இருக்க வேண்டும்.

இந்த மஜிமக அரசனின் காசு அவன் சமணத்தை ஆதரிக்கும் முன்னர் அச்சிடப்பட்டது. அதன்பிறகு உருகுணைப் பகுதியில் சமணர்காசுகள் ஏறக்குறைய 4 கண்டறியப்பட்டுள்ளன. தேடினால் இன்னும் கிடைக்கலாம்.



மேலுள்ள கல்வெட்டு மச்சராசன் சமணத்தை ஆதரித்தபின்னர் அவர்களுக்கு கொடுத்த சங்கத்தை பற்றியது.
கல்வெட்டு வரிகள்:

காமணி திசக பிதக மஜ்ஜி மாராஜாக சபரிபோகனி சாகசகிரிதிச்சகாமெ வெளிகமெ கசபநகரே மலுகமே நொக்கபிகெ

பொருள்:
காமணி திச்சனின் தந்தையான மச்சமகாராசன் கிரிதிச்சா, கரஜகிதிச்சா, வெளிகமா (தற்போதைய வெளிகமை) கசப நகரே (காசியப்ப நகரம்), மலுகமை, நொக்கபிக போன்ற கிராமங்களை சங்கத்துகுக் கொடுத்தான்.

இந்த காமணி திச்சனின் மகன்களே உருகுணை கல்வெட்டுகளில் கூறப்படும் தசாபாதிகர் என்ற பத்து சகோதரர்கள். இவர்களைக் கொன்றே துட்டகைமுனுவின் தாத்தாவான கோத்தபயா (இங்கும் ஒரு கோத்தபயா) உருகுணையை கைப்பற்றினான். இந்த கோத்தப்யா தான் அசோகனோடு நட்புகொண்டு பௌத்தத்தை ஈழத்துக்கு அறிமுகப்படுத்திய தேவநாம்பியனின் தம்பியான மகாநாகனின் இரண்டாவது மகன்.

தேவநாம்பியன் திச்சன் கடைசி ஆட்சியாண்டில்தான் புத்தம் ஈழத்துக்கு அறிமுகமானது. இதில் அசோகன் ஆட்சி வேறு தேவநாம்பி திச்சனின் இறுதிக்காலத்திலே தொடங்குகிறது.

சோகனுக்கு இரண்டு தலைமுறை முன்னர் பிராகிருத காசை வெளியிட்ட மச்சமகாரசன் ஒருத்தன் இருக்கும் போது எப்படி அசோகன் பிராகிருதப் பிராமியை கன்டறிந்ததாக ஆகும்?

தமிழகத்தில் கொடுமணலில் கிடைத்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பானையோட்டு பொறிப்புகள் தமிழி அல்ல என்கிறார்கள். அதில் ழ,ள, ற,ன இல்லை என்பதால் அப்படி சொல்கிறார்கள். சரி விடலாம். அது பிராகிருதமாகவே இருக்கட்டும். அப்போது கி.மு. 500இலேயே தோற்றம் பெற்ற பிராமி எப்படி கி.மு. மூண்றாம் நூற்றாண்டில் பிறந்த அசோகனுக்கு சொந்தமானது? அசோகப்பிராமியாவது மன்னாங்கட்டியாவது. போங்கடா போங்க.

கீழுள்ளது உருகுணைப்பாண்டியர்களின் ஆட்சிக்காலமும் அவர்களிடம் இருந்து சிங்களர்கள் உருகுணையை கவர்ந்து ஆட்சி நடத்திய காலங்களும். இந்த அட்டவணையை யாராவது தவறென நிரூபித்துவிட்டு அப்புறம் அசோகப்பிராமி மௌரிய பிராமின்னு கதவிடுங்க.