ஈராண்டுகளுக்கு முன்பு ஆக்ரமிக்கப்பட்ட தமிழகப் பகுதியான கேரளாவின் காசர்கோட்டில் தமிழி-வட்டெழுத்து கலந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் "கழிகோர பட்டன் மகன் சாருமன்" என எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை வாசித்த இராகவா வாரியர் என்னும் வடுக வந்தேறி ஒருவன் இதை திராவிடப் பிராமி என திரித்துக் கதை கட்டியுள்ளான்.

ழகரமும் புள்ளியிட்ட மெய்யெழுத்துக்களும் இருந்தால் அவை தமிழி எனக் கொள்ளப்படுவதே உலக வழக்கு. அதன்படி இந்த வடுகன் 2012ல் வாசித்த எடக்கல் கல்வெட்டை தமிழ் என்று சொன்னான். ஆனால் திராவிடம் என்ற சொல்லுக்கே வரலாற்று அளவிலும் எதிர்ப்பு வரத் தொடங்கியதால் அளறியடித்த வடுகர் கூட்டம் 2014ல் இருந்து ஒப்பாரி வைக்க கண்டுபிடித்தது தான் திராவிடப் பிராமி என்ற கட்டுக்கதை.
இந்த வாரியர் வடுகனுக்கு திராவிடத்தை ஊட்டி வளர்த்த நாயர் வடுகர் கூட்டத்திலும் அமோக ஆதரவு இருக்கிறது என்பது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட அறிவிப்பு வெளியான நாளிதழ் செய்தியைப் பார்த்தால் புரியும். தமிழகத் தொல்லியல் துறையில் இருக்கும் வடுகப்பிராமணனான வெள்ளை யானை பெரியச்சாமி ஏற்கனவே பொருந்தாத பெயர்களான அசோகப் பிராமி சிங்களப் பிராமி என்ற பெயர்களை பழைய பாகத எழுத்துமுறைகளுக்கு வைத்து வரலாற்றைக் கெடுத்தவன். இதை கீழுள்ள என் பழைய பதிவுகளில் காணலாம்.
அது என்னப்பா அசோகப் பிராமி?
அது என்னப்பா சிங்களப் பிராமி.?!
தமிழியை அசோகப் பிராமியில் இருந்து இரவல் வாங்கிய எழுத்துமுறை என்று பலானக் கட்டுரைகளை எழுதிய இவனை எதிர்க்க தமிழகத் தொல்லியல் துறையில் எவருக்கும் வக்கு இல்லை. (இதுவரைக்கும்) பாகத எழுத்துக்களையே முதலில் அசோகன் கண்டுபிடிக்காத போது பாகத எழுத்துமுறைக்கு அசோகப்பிராமி என பெயர் வைத்தார்கள். தமிழகத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் மண்ணடுக்கில் இரண்டு பானையோட்டுப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட அதில் தமிழிக்கே ஊரிய ழ, ள, ற, ன இல்லாததால் அது தமிழி இல்லை பாகதம் எனச் சொன்னார்கள். அது அவர்கள் சொல்லும் படி பாகதம் எனவே வைத்துக்கொள்வோம். அவர்கள் சொல்கிறபடிப் பார்த்தாலும் கூட தமிழகத்தில் கிடைத்த பாகத எழுத்துக்கள் அசோகனின் காலத்துக்கு இரண்டு நூற்றாண்டுகள் முந்தியது. எனில் இன்னும் பாகத எழுத்துமுறைக்கு அசோகப்பிராமி என பெயர் வைப்பானேன்?
இங்கு தான் இருக்கு வெள்ளை யானை பெத்தவாட்டின் தில்லு முல்லு. இது தவிர ஈழத்தில் உள்ள பாகத எழுத்து முறையோ கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முந்தையது. அது ஈழத்தில் இருந்த உருகுணை பாண்டிய அரச மரபினால் எழுதப்பட்டது. எனில் தமிழ் பிராமிக்கு தமிழி என்றும் சிங்களப் பிராமிக்கும் பாகத பிராமிக்கும் பாண்டியரை நினைவுக்கூறும் பெயரை இடுவதுமே தகும். ஏற்கனவே உருகுணை பாண்டிய அரச மரபினர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் ஈலு என்னும் தமிழ் வழக்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக காலக் கணிப்புடன் என் ஆய்வுக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.
உருகுணைப் பாண்டியர்கள்
ஆனால் இந்த ஆய்வுக்கட்டுரையை கோவையில் நடந்த தமிழக தொல்லியல் கருத்தரங்கில் ஏனோ நான் அனுப்பியும் தேர்தெடுக்கவில்லை. இது மட்டும் தேர்வாகியிருந்தால் அங்கு வந்திருந்த தொல்லியல் ஆய்வாளர்களுக்கு நான் செய்த ஆய்வு தெரிய வந்து அவர்கள் அதைக் கொண்டு பாகத எழுத்துக்களை அசோகன் தென்னீழப் பாண்டிய மரபிடம் இருந்து தான் எடுத்துக்கொண்டான் என உண்மை தெரிய வந்திருக்கும். அவர்கள் அதை உலகளவிலும் கூட கொண்டு போய் சக வல்லுநர் மீளாய்வு அறிக்கைகளுக்கு (Peer Review) ஏற்பாடு செய்து உலகளவில் தமிழி எழுத்தின் தொன்மையையும் ஈழு எழுத்தின் தொன்மையையும் ஏற்க செய்திருப்பர் (Widely Acceptable). ஆனால் நான் கோவையில் நடந்த தமிழக தொல்லியல் கருத்தரங்கிற்கு கட்டுரையை அனுப்பியும் அது தேர்தெடுக்கப்படாமல் விடப்பட்டது.
கீழுள்ள படத்தில் அசோகன் தாத்தன் காலத்திலேயே ஈழு வழக்கில் பாண்டியர்கள் கல்வெட்டை பொறித்திருப்பது காட்டப்பட்டுள்ளது.
தமிழின் பெயரும் ஈழுவின் பெயரும் தெரியக் கூடாது என்றே பெத்தவாட்டுப் பிராமணர்களும் தரவாட்டு மணவாட்டு வடுகர்களும் செய்யும் உலகச் சதிகளில் ஒன்று தான் சிங்களப் பிராமி என்ற பெயரும் அசோகப்பிராமி என்ற பெயரும். இப்போது அந்த அசோகப்பிராமிக்கும் சிங்களப்பிராமிக்கும் பிறந்த கள்ளக் குழந்தையாக இந்த திராவிடப் பிராமி என்னும் பெயரை வடுகப்பிராமணியம் எடுத்தாளத் தொடங்கிவிட்டது. தமிழக ஆய்வாளர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர் தரப்பு ஆய்வையும் செய்கிறது. அது பொய்யான முடிவைத் தந்தாலும் அதை உண்மையாக்க அரசியலையும் செய்கிறது.
ஆனால் தமிழரோ ஆய்வை மட்டும் வைத்துக் கொண்டு அது உண்மையான முடிவைத் தந்தாலும் அரசியல் செய்யத் தெரியாதலால் இன்றும் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இனி காலம் மாறும். மாற்றுவோம். அடுத்து வரும் தலைமுறையினர்.
ஆனால் இனி காலம் மாறும். மாற்றுவோம். அடுத்து வரும் தலைமுறையினர்.
No comments:
Post a Comment