Friday 27 December 2013

கச்சமும் களிறும் கயலும் குதிரையும் கொண்ட கவுரியர் காசுகள்

கச்சம் - ஆமை

களிறு - யானை

கயல் - மீன்

கவுரியர் - பாண்டியர்

இவ்வளவு விளக்கம் எதற்கு?

காரணம் பல இருக்கு.

களிறு

மொழிப்பெயர் தேயத்தில் (பண்டைய தமிழகமும் ஈழமும்) யானையை சின்னமாக கொண்டு காசுகளைப் பொறித்த மன்னர்கள் யார்? யார்?

முதலில் பாண்டியர்.

இரண்டாவது சேரர்.

மூன்றாவது மஜ்ஜிமகாராசனின்  வழிவந்த உருகுணையை ஆண்ட மன்னர்கள். என் மொழியில் உருகுணை பாண்டியர்கள். இவர்கள் மட்டுமே களிற்றுக்காசுகளை வெளியிட்டார்கள்.

சோழர் புலியையும் வேறு சின்னங்களைக் கொண்டும் சிங்களவர் சிங்கமும் வேறு சின்னங்களைக் கொண்டும் காசுகளை வெளியிட்டார்கள்.

கயல்

கயல் பொறித்தக் காசுகளை பாண்டியர் மட்டுமே பண்டைய மொழிப்பெயர் தேயத்தில் வெளியிட்டனர்.

கச்சம் - ஆமை

கச்சம் பொறித்தக் காசுகளை பாண்டியர் மட்டுமே பண்டைய மொழிப்பெயர் தேயத்தில் வெளியிட்டனர்.

குதிரை

குதிரையைச் சின்னமாகப் பொறித்துக்கொண்டு அனைவருமே காசுகளை வெளியிட்டார்கள். குறுநில மன்னர்களான மலையமான்கள் கூட குதிரை முத்திரையோடு காசுகளை வெளியிட்டார்கள்.

மன்னர்கள் மட்டும் தான் காசுகளை வெளியிட்டார்களா?

நிச்சயம் இல்லை வணிகர்களும் இட்டார்கள். ஆனால் அவற்றுள் யானையை சின்னமாக வைப்பதில்லை. தங்கள் குல முத்திரைகளை இட்டார்கள். மதம் தொடர்பானவர்களும் இட்டார்கள். இதை நான் கூறுவதற்கு காரணம் ஆமை பொறித்த காசுகளை மொழிப்பெயர் தேயத்தில் இரண்டே மரபைச் சேர்ந்தவர்கள் தான் இட்டார்கள். ஒன்று பாண்டியர். இன்னொன்று உருகுணையில் உள்ள ஒரு குலத்தோர். பாண்டியர் தவிர்த்து உருகுணையில் மொத்தம் மூன்று காசுகள் ஆமை தொடர்பானவை. அவை மூன்றும் கீழே உள்ளன. இவற்றில் உள்ள ஒற்றுமையை வைத்துத்தான் நான் அடுத்த பதிவான இலங்கையில் சமணர் என்ற பதிவை இடப்போகிறேன்.


இதில் சூடஷமனஹ என்னும் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கு நடுவே ஒரு ஆமை உள்ளதை கவனியுங்கள். இவர்கள் அரசர்களாக இருக்க வாய்ப்பில்லை. வணிகர்களாகவோ சமணம் தொடர்பானவர்களோ அல்லது உருகுணைப் பாண்டியர்கள் தொடர்பானவர்களாகவோ இருக்கலாம்.


இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். ஆமையின் வடிவத்திலேயே உள்ள தெளிவற்ற  பிராமி எழுத்துகள் பொறித்த காசு.

இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் ஓன்பது ஆமைகள் சுற்றுகின்றன. முன்னால் கபதிகசமணசபுதசட‌கடக என்றுள்ளது. கபதி என்றால் பிராகிருதத்தில் குடும்பம் என்று பொருள். சேர்த்துப் படித்து பொருள் உணர்ந்தால் இதை சமனாச குடும்பத்தலைவனின் மகன் சடகன் கொடுத்தவை என பொருள் தரும்.

இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் ஆமை ஒன்று. முன்னால் தேவாளபூச என்று எழுதியிருப்பதாக கூறுகின்றனர். இதில் ஆறெழுத்து உள்ளது. ஆனால் ஐந்தை தான் படித்திருக்கின்றனர். ள.ழ,ற,ன என்ற நான்கு எழுத்துக்களும் தமிழ் பிராமிக்கே ஊரியது. அதனால் நான் அந்த ஆறாவது எழுத்தையும் சேர்த்து தேவாளபூதன் எனப்படிக்கின்றேன். காரணம் தமிழ் பெயர் பெரும்பாலும் அன் விகுதியில் முடியும்.

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி நல்ல காமெடியா இருக்கே. பாண்டியர் நாங்கள் தான் எனச் சொல்லி விக்கியில் தேவர் மட்டும் அல்ல. நாடார், வன்னியர், தேவேந்திரர், பரதவர் என எல்லாம் இற்றைப்படுத்தி நான் நீக்கியது உண்டு. அதனால் நகைச்சுவை செய்யாதீர்கள். வேளாளரில் கொங்கு வேளாளர் சேரர் என எழுதி அதையும் நான் நீக்கியுள்ளேன். கார்காத்த வேளாளர் கட்டுரையில் அப்படி எழுதினாலும் நீக்குவோம்.

      விக்கியில் ஒரு நிர்வாகி தவறாகச் செயல்படுகிறார் எனில் அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் புகாரளிக்கலாம்.

      மேலும் தங்களுடைய பெயரை அடையாளப்படுத்தவும். நீங்கள் யார்? உங்கள் தொகுப்புக்களை நான் விக்கியில் நீக்கியிருக்கிறேனா?

      இதற்கு நீங்கள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்கவில்லை எனில் இக்கருத்தை நீக்கிவிடுவேன்.

      Delete
    2. தங்களது சிரிப்பு பிரமாதமாக உள்ளது.தாங்கள் உன்மையாகவே நடுநிலையாளராக இருந்தால் அதை கண்டு நான் பெரும் உவகை கொள்கின்றேன்.பிராமணர் என்பவர் யார் ஆயர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என நடுநிலை தவராது போட்டு உடைத்தாள் தான் தமிழக வரலாறு ஒரு தீர்மானம் எட்டும். ஆய்வேளிர்கள் என்பவர்கள் நம்பூதிரிகள் திருவிதாங்கூர் அரசர் எனில். தாங்கள் எனது கருத்தை நீக்கலாம் எனக்கு எந்த அட்சபனையும் இல்லை. பார்ப்போம் வரலாறின் அடியும் முடியும் எது வரை நீளும் என.

      Delete
  2. எனது கருத்தை நானே நீக்கிவிடுகின்றேன் எனக்கும் வெளிரின் வர்க்கத்தில் சில நன்பர்கள் உண்டு. விக்கீபீடியா பலரின் கையில் தனிக்கை செய்யும் வலையாகத்தான் உள்ளது. சில காலமாகவே. தங்களது விக்கீ பதிவுகளின் ஆட்சேபனைகள் பற்றி ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன் தங்களின் ஆசை என்ன என்பதையும் நான் கான நேர்ந்தது. எனக்கும் பாண்டியர் பற்றி கயத்தாறு,உக்கிரங்கோட்டை,புலியூரில் சில குடும்பங்களை பற்றி கேட்டு வைத்துள்ளேன் பார்ப்போம். சதுர் வர்ணத்தின் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரை பரந்துள்ள அந்த ஆவினத்தவர்களின் பரினாமங்களை கண்டு தற்போது ஆச்சர்யமடைகின்றேன்.
    சமணரின் பிற்க்காலம் சைவ,வைனவர்களால் எப்படி ஒதுக்க பட்டது. சமண குருக்களின் நிலை என்ன. அவர்களின் தற்கால பெயர் என்ன பாண்டியனால் வேட்டையாடப்பட்ட சமணர்களின் இன்றைய வர்க்கத்தையும் அறிவேன். சில ஆதாரங்களை தேடி கொண்டு இருக்கின்றேன் பார்ப்போம். கருநிலத்தின் கலிவர்க்கத்தினர்களின் அறிவர்கள் ஆராய்ச்சி பற்றியும் பார்ப்போம்!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சமணர் என்பதை விட ஜைனர் எனச் சொல்வதே சிறப்பு. சமணர் என்ற பெயர் சாவகம், ஆசீவகம், பௌத்தம், ஜைனம் நான்றுக்கும் ஊரியது. ஜைனர் கழுவேற்றம் என்பது ஒரு டுபாக்கூர் கதை. சைவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள இரண்டாமாய்யிறவாண்டில் (>=1000 AD) தோற்றுவித்த புனைக் கதைகள் அது. அப்படிச்சொன்னால் பயப்படுவார்கள் என அள்ளி விட்டிருக்கின்றனர். ஜைனரை கழுவேற்றியதாகச் சொல்லப்படும் நூற்றாண்டிலும் சரி. பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சரி. பாண்டியர் தொடர்ந்து ஜைனக் குடவரைகளை தோற்றுவித்தவaறே இருந்தனர். அதனால் சித்தரிக்கப்பட்ட கழுவேற்ற காலத்தின் சமகால ஜைன இலக்கியங்கள் இக்கழுவேற்றம் பற்றி யாதும் கூறவில்லை.

      பாண்டியர்கள் ஜைனர்களை வேட்டையாடிதகாச் சொல்லப்படுவது முதல் நிலைச்சான்றுகளின் உண்மைதன்மையை அறியாதவர் செய்யும் கேளிக்கூற்றாகும்.

      Delete
    2. தெண்காசியாரே கொஞ்சம் பெரியபுராணம் கிடைத்தால் படிக்கவும். சைவம்,வைணத்து தெய்வங்கள் பவனி வருகையில் நிர்வாணமாக உடலில் அளுக்கேரிய தேகத்தில் வரும் சமணர் வீட்டு பெண்களை பலாத்காரம் செய்யவேண்டும் என திருக்க்ஞானசம்பந்தரும் இவர்களை கண்டால் ஒன்று நான் என் தலையை கொய்ய வேண்டும் அல்லது அவரது தலைகளை திருவரங்கத்தான் சீவ வேண்டும் என தொண்டரடி பொடி ஆழ்வார் பாடும் பாடல்கள் உண்டு. சமணமும் பௌத்தனை கண்டால் சண்டாளன் என ஒதுக்க வேண்டும் முழு நிர்வாண சமணர்களுக்கு ஆயுசு முழுக்க அரை நிர்வாண தண்டனை வழங்கி அவர்களை பணையேற அல்லது கம்மாய் வெட்ட செய்ய வேண்டும் என தீர்ப்பிட்ட சைவ வைனவர்களை என்ன செய்வது. மதுரைக்கு மேற்கே மேலக்கால் என்னும் இடம் உண்டு அது மேலக்கழுவுள் என்பதன் திரிபாகும் இன்றைக்கும் கழுவன் என பெயர் சூடுபவர் எவர் கழு ஏறும் சடங்கு யார் யாரிடம் உண்டு உயிர் தப்பிய சமண குருக்கள் பௌத்த சாம்ராஜ்யமாய் இலங்கை சென்றது எப்போது பின்பு இங்கு திரும்பியது எப்போது. என நீங்கள் கொஞ்சம் ஆராய்ந்தால் நன்றாக இருக்கும் அறிவர்,உழமர் என சமணம் சாண்ற கல்விபோதனை மட்டும் போதாது என தோன்றுகின்றது.

      Delete
    3. பெரியபுராணம் எழுதப்பட்டது 12ஆம் நூற்றாண்டு. சம்பந்தர் வாழ்ந்தது எப்போ? அதுக்குள் ப்லதை திரிந்திருக்கும்.

      Delete
  3. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  4. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete