Thursday 14 February 2013

பரங்குன்றின் உருவெழுத்து சுட்டுவதென்ன?


சமீபத்தில் கா.ராஜன் என்ற ஆய்வாளரிம் மாணாக்கர் திருப்பரங்குன்றில் மேலுமோர் கல்வெட்டை கண்டறிந்தனர்.
இதில் முதன்வரியில் உள்ள கடைசி எழுத்து உருவ எழுத்தெனில் இப்பொறிப்பு மாங்குளம் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதே.

இது போல் கடைசி எழுத்து உருவ எழுத்தாக இருக்குமெனில் அதை கி.மு. 500 - 300 ஆண்டுகள் பழமை ஆனதென்பார் காசிநாதன். இது போலவே கொங்கர் புளியங்குளம் (கல்வெட்டு எண் 12, 13), விக்கிரமங்கலம் (கல்வெட்டு எண் 9), அழகர்மலை (கல்வெட்டு எண் 36, 38, 40, 41, 42, 43, 46, 47) ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இறுதியில் உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் உருவ எழுத்துக்களாக உள்ளன. இந்த எழுத்துக்கள் அக்குகை செய்யத் தேவையான பொன்னின் மதிப்பை சுட்டுகின்றன என்பார் மயிலையார்.

இனி என் கருத்துகள்:

இதற்கு ஏற்றாற் போலவே கொங்கர் புளியங்குள கல்வெட்டுகள் கூறையோடு ஈத்தவன் பொன் என்றும் பிட்டன் ஈத்த பொன் எனக்குறிப்பிட்டு பொன்னின் மதிப்பையும் எதற்கு பொன் ஈந்தான் என்பதை சதுர எழுத்த்தாக்வும் பொறித்தனர் எனலாம்.
மேலும் அழகர்மலைக்கு இன்னின்னார் இவ்வளவு பணம் ஈந்தனர் என்று தெளிவாகவே உள்ளதாகவே நான் அனுமானிக்கிறேன். அவை.

1. மதிரை பொற்கொல்வான் ஆதனாதன் - இவன் பணகாரன் என்பதால் இவன் கொடுத்த பொன்னின் மதிப்பில் வட்டத்தின் நடுவில் கோடும் வட்டத்தின் வெளியில் மூன்று கோடுகளும் உள்ளன.

2. மதுரை உப்பு வாணிகன், அவனது மக்ன் ஆதனாதன், வழுதி, நெடுமலன், பணித வணிகன், கோழி வாணிகன் எலவ நாகன் - இவர்கள் பொற்கொல்லன் அல்ல. 
வாணிகன் என்பதால் இவர்கள் கொடுத்த பொன்னின் மதிப்பில் வட்டத்தின் வெளியில் மூன்று கோடுகள் மட்டுமுளன.

3. திரைநாடன், ஈழவாயிரவன் - இவர்கல் வரி வசூலிப்பர் என்று கொண்டால் இவர்கள் மிகக்குறைவாக பொன்னீந்தர் எனக்கொள்ளலாம். அதனால் இவர்கள் ஈந்த பொன்னின் மதிப்பில் வட்டத்தின் நடுவிலோ வெளியிலோ கோடுகல் இல்லை.

பரங்குன்று:
இப்பரங்குன்றில் காணப்படும் சூல வடிவெழுத்து அவர்கள் சூலத்தை வழிபடும் இடத்தை கொடுத்தநர் எனக்குறிக்கலாம். இச்சின்ன வழிபாடுகள் மூன்றாம் நிலையிலுள்ளவை. பினவரும் குத்துக்கல்வலசையிலுள்ள சூல பீடத்தை பார்க்கவும். 


இதன் பின்னரே உருவ வழிபாடு எழுந்தது. முதலில் கொற்றவையை சூலமாகவே வழிபட்டு பின்னர் உருவமாக வழிபட்டனர் என்பதை இது சுட்டுகிற‌து. இதற்கு ஏற்றாற் போலவே மூசக்தி என்ற பெயரும் கீழேயே பொறிக்கப் பட்டிருந்தது.

பிற்பாடு பொன்னின் மதிப்பை குறிப்பதற்கு காணம் என்ற சொல்லை உபயோகித்தனர் என்பது "காணம் கொட்டுபித்தவன்" என்று தமிழி எழுத்துக்கள் மூலமே அழகர்மலை கல்வெட்டில் பொறித்தை வைத்து நிறுவிட முடியும் இதில் பொன்னின் மதிப்பை குறிக்கும் உருவெழுத்து இல்லை.

அதனால் பரங்குன்றின் கல்வெட்டு சூல பீடத்தை உருவ எழுத்தாகவே குறிப்பதால் இது மாங்குளம் கல்வெட்டுக்கு முந்தியவை. நடன காசிநாதன் இக்கல்வெட்டு கி.மு. 500 கலைச் சேர்ந்தது என ஒரு கட்டுரை வெளியிடுவார் என நாம் எதிர்பார்ப்போம். 

இந்து நாளிதற்செய்தி
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tamilbrahmi-script-discovered-on-tirupparankundram-hill/article4412125.ece

No comments:

Post a Comment